.

Pages

Saturday, December 13, 2014

அதிரையில் பண்ணா மீன்கள் விற்பனை அதிகரிப்பு !

அதிரையை உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து உள்ளூர் மீன் மார்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். அதே போல் அதிரையை அடுத்து காணப்படும் கடற்கரையோர பகுதிகளாகிய மல்லிபட்டினம், சேதுபாவசத்திரம், கட்டுமாவாடி உள்ளிட்ட துறைமுகங்களில் பிடிக்கப்படும் மீன்களும் இப்பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும். இங்குள்ள மீன் வியாபாரிகள் மீன் கிடைக்காத காலகட்டங்களில் தொலை தூர பகுதிகளுக்கு குறிப்பாக தூத்துக்குடி, நாகப்பட்டினம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மொத்தமாக வாங்கி வந்து இங்கு விற்பதும் உண்டு.

உள்ளூர் மார்கெட்டில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மீன்களின் வரத்து அதிகமாகவே காணப்படும். இதற்கு முன்பு இங்கு விற்பனை செய்யப்பட்ட தேசப்பொடி, காரைப்பொடி, வாளைமீன், கொடுவா மீன், முரல் மீன், திருக்கை மீன், தாளன் சுறா, இறால், சிங்கி இறால் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் காரைக்கால் துறைமுக பகுதியிலிருந்து வாங்கி வரப்பட்ட பண்ணா மீன்கள் கடைத்தெரு மீன் மார்கெட்டிற்கு விற்பனைக்கு வந்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட இந்த மீன்கள் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால் அதிரையர்கள் அதிகமாக விரும்பி சாப்பிடுவார்கள். கிலோ ₹ 150 க்கு விற்கப்பட்டது. விலை மலிவாக இருப்பதால் மீன் பிரியர்கள் போட்டிபோட்டு கொண்டு வாங்கிச் செல்கின்றனர். விரைவாக விற்பதுடன், நிறைவான லாபம் கிடைப்பதால் மீன் வியாபாரிக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 comment:

  1. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    பண்ணா பண்ணாதான், பார்த்து வாங்க பலர் இல்லை, விலையைக் ‎கேட்டால் வெறிக்குது மனசு, ஆனால் நாக்கு மட்டும் ஒத்துழைக்க ‎மாட்டேங்குது.‎

    கூறு போடாமல், எடை போட்டு விற்க வேண்டும்.‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.