.

Pages

Tuesday, December 9, 2014

நடுத்தெரு சுற்று வட்டார பகுதிகளின் அள்ளப்படாத குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு, வாய்க்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் அள்ளப்படாமல் காணப்படும் குப்பை கூளங்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட நடுத்தெரு, வாய்க்கால் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சேரும் குப்பை கூளங்கள் கடந்த சில நாட்களாக அப்புறப்படுத்தப்படாததால் ஆங்காங்கே குமிந்து காணப்படுகிறது. இவற்றை வீதியில் சுற்றி திரியும் மாடுகள் கிளறுவதால் துர் நாற்றம் வீசுவதாகவும், குப்பைகள் ஆங்காங்கே சிதறிக்கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகம் இவற்றை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டு துப்புரவு ஊழியர்களை அனுப்பி தேங்கி காணப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று காலை 9 மணியளவில் எடுக்கப்பட்ட குப்பைகளின் படங்கள்...

2 comments:

  1. எங்களால் மட்டும் தான் போட முடியும்
    நாங்கள் ஊர், தெரு சாதனை படைத்துள்ளோம்.
    ஹி ஹி ஹி .....,,,

    ReplyDelete
  2. இலவசங்களை கொடுத்து முட்டாளுக்கும் அரசு கொஞ்சம் clean India திட்டத்தை வித்தியாசமான முறையில் தமிழக அரசு செயல் படுத்துமா? கேஸ் connection வைத்துருப்பவர்களுக்கு கண்டிப்பாக பேங்க் அக்கௌன்ட் இருக்கும். இந்த வீணாப்போன குப்பைக்கு மங்கும் குப்பை ஒரு தொகையும் மங்கா குப்பைக்கு மற்றொரு தொகையும் நிர்ணயித்து வீடுகளில் துப்புரவாளர் வசூலிப்பார் அதன் மானியம் உங்கள் அக்கௌண்டில் போடப்படும் என்று அறிவித்தால் அப்புறம் பாருங்க எப்படி தெரு இருக்குமுன்னு...... துப்புரவாளர் பிறகு துப்பு ....... வரவு ஆகிவிடுவார்.

    குப்பை ஒழிக்க நல்ல யோசனை தானே ! அரசு பரிசிளிக்குமா ?

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.