.

Pages

Saturday, December 20, 2014

கண் பரிசோதனை முகாம் !

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் 104 வது ஆண்டு துவக்கவிழா மற்றும் பேராவூரணி வங்கி கிளை நான்காம் ஆண்டு துவக்க விழாவையொட்டி பேராவூரணி நடேச. குணசேகரன் திருமண மண்டபத்தில் வெள்ளியன்று இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது.
               
சோழா எம்எஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் தஞ்சை வாசன் ஐ கேர் கண் மருத்துவமனையுடன் இணைந்து சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா நடத்திய கண்பரிசோதனை முகாமிற்கு கிளை மேலாளர் ஆர்.கே.இராமநாதன் தலைமை வகித்தார். சோழமண்டலம் இன்சூரன்ஸ் திருச்சி மேலாளர் எஸ்.பழனிவேலு முன்னிலை வகித்தார். முகாமில் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா கிளை உதவி மேலாளர் அபிஷேக் குமார், காசாளர் இசக்கியப்பன், சுபாஷ் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
           
தஞ்சை வாசன் ஐ கேர் கண்மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு கண்பரிசோதனை செய்தனர்.

செய்தி மற்றும் படம்: 
எஸ். ஜகுபர்அலி, பேராவூரணி.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.