.

Pages

Sunday, December 14, 2014

அதிரை டூ ஆக்ரா: அதிரை அஸ்ரப் அலியின் சுற்றுலா பார்வை !

நம் தேசத்தின் தலைநகர் எது என கேட்டால் சிறு பிள்ளை கூட பளிச்சென சொல்லிவிடும் டெல்லி என்று. இந்த டெல்லியின் அழகை காண வாழ்நாளில் ஒரு தடவையாவது நாம் செல்ல வேண்டும். பசுமையான சூழலுடன் அழகாக காட்சியளிக்கிறது.

டெல்லி சுல்தான்கள் ஆட்சி முடிவுற்ற பிறகு அதாவது பானிபட் எனும் இடத்தில் முகலாய மன்னர் பாபரும், இப்ராஹீம் லோடிக்கும் இடையே ஏற்பட்ட போரில் லோடி கொல்லப்படுகிறார். அன்று முதல் முகலாய முதல் மன்னரான பாபர் இந்திய தேசத்தின் ஆட்சியை கைப்பற்றுகிறார். சுமார் 800 ஆண்டு காலம் முகலாயர்கள் டெல்லியை மையமாக கொண்டு ஆட்சி செய்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள பிரமாண்டமான கோட்டைகளை காணும் போது இவர்கள் மிகச்சிறந்த கட்டட கலை வல்லூனர்களாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் அறிய முடியும். மன்னர்கள் வாழ்க்கையின், சுகம், வீரம், போட்டி, அழிவு, காதல், வாழ்க்கை முறை, சதி, தோல்வி என எல்லாவற்றையும் கூறும் வரலாற்று சான்றுகள். கண்டிப்பாக எல்லோரும் ஒரு முறையேனும் காண வேண்டிய இடங்கள் ஏராளமாக இருக்கிறது.

சரி விசயத்திற்கு வருவோம்...
துபாயில் பணி புரிந்து வரும் நான். சமீபத்தில் விடுமுறையில் தாயகம் திரும்பினேன். அப்போது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டேன். சுற்றுலா செல்ல தமிழகத்தில் பல்வேறு பகுதிகள் இருந்து வந்தாலும், டெல்லி சென்று அங்குள்ள அழகிய பகுதிகளை காண வேண்டும் என்ற ஆவல் நீண்ட நாட்களாக என் மனதில் இருந்து வந்தது.

தமிழகத்தில் இருந்து டெல்லி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சுற்றிப்பார்க்க வேண்டும் என்றால் இரயில் அல்லது விமானம் மூலம் செல்வது சிறந்ததாக இருக்கும். எனக்கு விமானத்தில் செல்ல வாய்ப்பு அமைந்தது. சென்னையிலிருந்து சுமார் 3 மணி நேரம் பயணம்...
தொடரும்...
அதிரை அஸ்ரப் அலி

3 comments:

  1. //டெல்லியில் உள்ள பிரமாண்டமான (கொட்டைகளை) காணும் போது//
    காக்கா வாசகத்தை திருத்தம் செய்யவும் ப பப்ளிக் பப்ளிக் . . . . .

    ReplyDelete
  2. சென்னையிலிருந்து சுமார் 3 மணி நேரம் பயணம்... அட
    சுற்றலா தொடர் எழுத ஆரம்பித்து விட்டீர்கள் போலும். டெல்லி இமாமை கண்டிப்பாக பார்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன் அத பற்றி கொஞ்சம் விவரமா சொல்லுங்க நூவன்னா காக்கா.

    காங்கிரஸ் தொண்டன் (இப்பவும் தான் ) கட்சி விஷயமா முக்கிய புள்ளிகளை பார்த்தீர்களா ,,,,, சொல்லுங்க. இப்படி கேள்வியா தொடுத்து எழுதலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.