துவக்கமாக இறைவசனங்களை காயல் ஈஸா முஹைதீன் ஓதினார். ஈமான் கல்சுரல் செண்டரின் துணைத்தலைவர் அல்ஹாஜ் பி எஸ் எம் ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ லியாக்கத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார்.
துணைப் பொதுச்செயலாளர் திருப்பனந்தாள் அல்ஹாஜ் ஏ ,முஹம்மது தாஹா துவக்கவுரை நிகழ்த்தினார். வருடந்தோறும் ஈமான் அமைப்பு அமீரகத்தில் வசித்து வரும் தமிழக முஸ்லிம் குடும்பத்தினரை ஒருங்கிணைத்து சந்திப்பு நிகழ்விற்கு ஏற்பாடுகளைச் செய்வதுடன் பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கி வருகிறது.
சிறப்பு விருந்தினர்கள் காயிதேமில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான், முஸ்லிம் லீக் பிரமுகர்கள் மில்லத் முஹம்மது இஸ்மாயில், ஆடுதுறை ஷாஜஹான், முஹம்மது இப்ராஹிம், ஊடகவியலாளர் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.டி. கூரியர் நவாஸ் கனி, ஆலியா முஹம்மது டிரேடிங் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் ஷேக் தாவூது, அரேபியா ஹொல்டிங்ஸ் பொது மேலாளர் அப்துல் ரவூஃப், பிளாக் துளிப் பிளவர் இயக்குநர்கள் அல்ஹாஜ் யஹ்யா, சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர்.
அதிரையை சேர்ந்த ஜமாலுதீன் முதல் பரிசினைப் பெற்றார். நிகழ்வில் தமிழகத்தைச் சேர்ந்த பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஈமான் அமைப்பின் நிர்வாகிகள் முதுவை ஹிதாயத், கீழை ஹமீது யாசின், கும்பகோணம் சாதிக், மதுக்கூர் ஹிதாயத்துல்லா, ஜமால், முஹைதீன், காதர், உஸ்மான், யாக்கூப், ஈஸா, ஷேக் அப்துல்லா மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சிறப்புற செய்திருந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
முதுவை ஹிதாயத்
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
தம்பி ஜமாலுதீன் அவர்களுக்கு வாழ்த்துகள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com