.

Pages

Wednesday, July 26, 2017

பட்டுக்கோட்டையில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையின் நடுவே படுத்து மறியல் ( படங்கள் )

பட்டுக்கோட்டை, ஜூலை 26
இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலையின் நடுவே படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் மார்க்ஸ், ஒன்றியச் செயலாளர் முத்துவேலு தலைமை தாங்கினார்கள். அதிராம்பட்டினம் பேரூர் செயலர் என். காளிதாஸ், இளைஞர் அணி செயலாளர் ஹாஜா முகைதீன் உள்பட பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்று குழு அமைக்க வேண்டும்.விவசாயிகளின் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். ஜி.எஸ்.டி. வரியை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.இந்தியை திணிக்க கூடாது. விவசாய தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும்.ஹைட்ரோ கார்பன்,மீத்தேன், ஷேல் எரிவாயு எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 25 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.