.

Pages

Friday, July 14, 2017

தஞ்சை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில்
அம்மா திட்ட முகாம்  நடைபெற்றது. தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் இன்று (14.07.2017) வெள்ளிக்கிழமை பார்வையிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தஞ்சாவூர் வட்டத்தில் பள்ளியக்ரஹாரம் கிராமத்திலும், திருவையாறு வட்டத்தில் திருவையாறு கிழக்கு கிராமத்திலும், பூதலூர் வட்டத்தில் தொண்டராயன்பாடி கிராமத்திலும், ஒரத்தநாடு வட்டத்தில் திருமங்கலக்கோட்டை மேலையூர் கிராமத்திலும், கும்பகோணம் வட்டத்தில் கீரனூர் கிராமத்திலும், பாபநாசம் வட்டத்தில் எடவாக்குடி கிராமத்திலும், திருவிடைமருதூர் வட்டத்தில் மணலூர் கிராமத்திலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் தொக்காலிக்காடு கிராமத்திலும், பேராவூரணி வட்டத்தில் திருவத்தேவன் கிராமத்திலும் அம்மா முகாம் இன்று நடைபெற்றது.

தமிழக அரசு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மா திட்ட முகாம் நடத்த வேண்டுமென்று உத்தரவிட்டு அதன்படி அந்தந்த வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் அம்மா திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.  இந்த அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித் தொகை, கல்வி உதவித் தொகை, வீட்டு மனை பட்டா மாற்றம், ஸ்மார்ட் கார்டு வழங்குதல் போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு மனுதாரர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் அம்மா திட்ட முகாமில் அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அம்மா திட்ட முகாம் நடைபெறுவதால், பொது மக்களின் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படுகிறது.

இன்று பள்ளியக்ரஹாரத்தில் நடைபெற்ற அம்மா திட்ட முகாமில் முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை, வீட்டு மனை பட்டா, பட்டா மாற்றம், என 35 மனுக்கள் பெறப்பட்டு, அரசின் விதிமுறைக்குட்பட்டிருக்கும் மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.