.

Pages

Monday, July 17, 2017

ஏரி, குளங்களில் இலவச மண் எடுக்க, பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் !

ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்க
வட்டாட்சியர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தகவல் தெரிவித்துள்ளார்.

ஏரி குளங்கள், வாய்க்கால்களில் வண்டல் மண், சவுடு மண், களி மண் போன்ற கனிமங்கள் விவசாயிகள் மற்றும்  பொது மக்கள் எடுப்பதற்கு அந்தந்த வட்டாட்சியர்களே அனுமதி ஆணை வழங்கலாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 1436 ஏரி, குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் மண் எடுத்துக் கொள்வதற்கு மாவட்ட அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 722 ஏரி, குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் இது வரை 9,87,290 கன மீட்டர் அளவிற்கு வண்டல் மண் எடுத்து 12,127 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே விவசாய பயன்பாட்டிற்கு வண்டல் மண், சவுடு  மண், களி மண் எடுத்துக் கொள்வதற்கு அனுமதி ஆணை பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து கிராம நிர்வாக அலுவலகத்திலும் சிறப்பு முகாம் பிரதி செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும்  விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுப்பதற்கு மனுக்கள் பெறப்பட்டு  உடனடியாக வட்டாட்சியர்களால் ஆணை வழங்கப்படும்.

ஏரி, குளங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்கு வண்டல் மண், சவுடு மண், களி மண் போன்ற கனிமங்கள் இலவசமாக எடுத்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி, குளங்களில் மண் எடுத்துக் கொள்வதற்கு அந்தந்த வட்டாட்சியரிடம் மனு செய்து உடனடியாக அனுமதி உத்தரவு வழங்கப்பட்டு விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு தேவையான களி மண்களை எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

வண்டல் மண், சவுடு மண், களி மணி எடுப்பதற்கு பிரதி செவ்வாய் மற்றும் வியாழக் கிழமையும், அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தில் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். மனுக்கள் பெறப்பட்டு உடனடியாக மண் எடுப்பதற்கான அனுமதி வட்டாட்சியர்களால் ஆணை வழங்கப்படும்.

அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலேயே விவசாயிகளிடம் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக அனுமதி ஆணை வழங்கப்படும்.  இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள்,  மண்பாண்டம் செய்பவர்கள் மற்றும் பொது மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.