.

Pages

Tuesday, July 18, 2017

புனித அல் அக்ஸா பள்ளியில் தொழவிடாமல் தடுக்கும் இஸ்ரேலியப் படைகள் !

அதிரை நியூஸ்: ஜூலை 18
புனித மக்கா மற்றும் புனித மதீனா பள்ளிகளுக்கு அடுத்து இஸ்லாத்தால் அங்கீகரிக்கப்பட்ட 3 வது  புனிதப்பள்ளி அல் அக்ஸா, இது பாலாஸ்தீன் நாட்டில் ஜெருசலேம் என அழைக்கப்படும் அல் குத்ஸ் (Al Quds) நகரில் உள்ளது. இந்தப் பள்ளியில் தொழ வரும் முஸ்லீம்களுக்கு இதுவரை பல்வேறு இன்னல்களை தொடர்ந்து இழைத்து வருகிறது யூத பயங்கரவாதிகளின் தலைமையிடமான இஸ்ரேல்.

கடந்த வெள்ளிக்கிழமை முதல் அல் அக்ஸா மஸ்ஜிதில் தொழ திடீரென தடை விதித்தும் கண்காணிப்பு கேமிராக்கள், மெட்டல் டிடெக்கர் சோதனை வாயில்களையும் நிறுவியும் தொல்லை தந்ததை எதிர்த்து முஸ்லீம்கள் அல் அக்ஸா பள்ளியின் சுற்றுச்சுவருக்கு வெளியே தொழுது தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மெட்டல் டிடெக்டர்கள், காமிராக்கள் மற்றும் ஈவிரக்கமற்ற யூத ராணுவ நாதாரிகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்தி பழையபடி சகஜநிலைக்கு கொண்டுவர வேண்டும் என சவுதி மன்னர் சல்மான் அவர்கள் அமெரிக்கா அரசு வழியாக இஸ்ரேலிய பயங்கரவாத அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

புனித அல் அக்ஸா பள்ளி மீண்டும் முஸ்லீம்களின் கைக்கு வரவும், 5 வேளை தொழுகை நடைபெறவும், இஸ்ரேலிய பயங்கரவாதிகள் முற்றிலும் தோற்கடிக்கப்படவும், தினந்தோறும் யூதர்களால் செத்துமடியும் பாலாஸ்தீன முஸ்லீம்களுக்கு விடுதலை கிடைத்திடவும் எல்லாம் வல்ல ரஹ்மானிடம் கையேந்துங்கள்.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.