அதிரை நியூஸ்: ஜூலை 23
நாளை திங்கட்கிழமை (24.07.2017) காலை 8 மணிமுதல் சவுதி அரேபியாவில் வசிக்கும் உள்நாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு துவங்குவதாக ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் அறிவித்துள்ளது.
சவுதியில் செயல்படும் சுமார் 250 ஹஜ் ஏற்பாட்டாளர்களில் இதுவரை 114 நிறுவனத்திற்கு மட்டுமே ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நகருக்கும் குறைந்தது சுமார் 25 இருக்கைகள் என கோட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாக விண்ணப்பிப்போர் அதற்கான கட்டணத்தை செலுத்தி இவ்வருடத்திற்கான ஹஜ் பெர்மிட்டை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த ஆண்டு மொத்தம் 239,000 உள்நாட்டு ஹஜ் பயணிகள் வருகை தருவார்கள். இவர்களில் 23,477 பேர் அரசின் மானிய உதவியுடன் ஹஜ் செய்வர். மேலும் 10,000 பேர் ஹஜ் முயாசீர் எனப்படும் சிறப்பு வசதிகளுடன் ஹஜ் செய்வார்கள். உள்நாட்டு ஹஜ் பயணிகளுக்கான செலவு கட்டணம் 3,477 முதல் 14,000 வரை இருக்கும்.
அதேபோல் உள்நாட்டு விமானச் சேவைக்கான ஒருவழிக் கட்டணம் 1,100 ரியால்கள் என்றும், புனித மக்காவுக்கு வெளியில் எங்கிருந்து வந்தாலும் ஒருவழி வாகனக் கட்டணம் அதிகபட்சம் 600 ரியால்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், அதேபோல் புனித மக்காவிற்குள் பயணம் செய்ய ஒருவழி வாகனக் கட்டணம் 150 ரியால்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகம் கட்டணங்களையும் நிர்ணயித்து அறிவித்துள்ளது.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.