அதிரை நியூஸ்: ஜூலை 24
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதார் அட்டை அவசியமில்லை என சில மாதங்களுக்கு முன் தான் மத்திய அரசு விளக்கமளித்திருந்தது ஆனால் தற்போது ஆதார் அட்டையை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவிக்கவுள்ளதாக என ஸ்டேட் பேங்க் ஆப் (SBI) இந்தியாவின் வெளிநாடு வாழ் இந்தியர்களின் கணக்குகளை கவனிக்கும் பிரிவு அறிவித்துள்ளது.
மத்திய அரசு இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்காமலேயே ஆதார் விபரங்களையும், பான் அட்டை விபரங்களையும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளுடன் இணைக்குமாறு உத்தரவிட்டுள்ளதாக கேரள மாநிலம் வர்க்கலா SBI கிளையில் NRI Section மேலாளர் GL ஜோஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.
விடிந்தால் ஒரு பேச்சு என செயல்படும் மத்திய அரசின் அறிவிப்பால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்களே ஏற்படுகின்றன. மேலும் ஆதார் அட்டை இல்லாத வெளிநாட்டு இந்தியர்களின் வங்கி கணக்குகளுக்கு (NRE) எந்த பாதிப்பும் வராது எனவும் விளக்கியுள்ளனர்???
ஆதார் அட்டை இல்லாத வெளிநாடு வாழ் இந்தியர்களின் குழந்தைகள் இந்திய குடியுரிமை அடிப்படையில் உயர்கல்விகளை பெற முடியாமல் அவதியுறுவதையும் மேலாளர் ஜோஸ் சுட்டிக்காட்டினார். மேலும் மத்திய அரசு வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஓட்டுரிமை கொண்டு வருவதற்காக பரிசீலித்து வருவதால் கட்டாயம் ஆதார் தேவைப்படுமாம்.
தற்போது ஆதார் அட்டைகளின் துணை கொண்டு ஆன்லைன் வழியாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்க, கேஸ் மானியம் பெற, வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய, வங்கிக் கணக்கு துவங்க, வங்கிக்கு நேரில் செல்லாமலேயே பென்சன் மற்றும் பிராவிடன்ட் தொகைகளை பெற்றுக் கொள்ள மற்றும் அரசின் இதர சலுகைகளை பெற்றுக் கொள்ளவும் பயன்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் காலத்தில் அரசின் அனைத்து சேவைகளையும் ஆதார் மூலம் மட்டுமே வழங்கிட திட்டமுள்ளதாலும் உடனே ஆதார் அட்டைகளை பெற்றுக் கொள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார் கேரள மாநிலம் வர்க்கலா SBI கிளையில் NRI Section மேலாளர் ஜோஸ்.
Source: Msn / Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.