![]() |
கோப்புபடம் |
மொரிஷியஸ் தீவில் நிகழவிருந்த 2 விமானங்களின் மோதல் ஏர் செஷல்ஸ் விமானிகளின் சமயோசிதத்தால் தவிர்க்கப்பட்டுள்ள செய்தியை செஷல்ஸ் அரசுசெய்தி நிறுவன அறிக்கையை மேற்கோள்காட்டி இன்று வெளியிட்டுள்ளது ஏவியேஸன் ஹெரால்டு பத்திரிக்கை.
கடந்த வெள்ளிக்கிழமை (14.07.2017) அன்று மொரிஷியஸ் விமான நிலையத்திலிருந்து கிளம்பி 37,000 அடி உயரத்தில் பறக்க ஏர் செஷல்ஸ் விமானத்திற்கு வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை அனுமதியளித்தது. அதேவேளை 38,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த உலகின் பெரிய விமானங்களின் ஒன்றான எமிரேட்ஸ் ஏர்லைன்ஸின் டபுள் டெக்கர் விமானம் தரையிறங்க 36,000 அடிக்கு கீழிறங்கி கொண்டிருந்தது.
இரு விமானங்களும் இந்திய பெருங்கடல் பரப்பிற்கு மேல் வான்வெளியில் மோதிக் கொள்ளவிருந்த நிலையில் ஏர் செஷல்ஸ் விமானிகள் விமானத்தை மாற்று வழியில் திருப்பி நூலிழையில் பெரும் விபத்தை தவிர்த்தனர்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே! உணரும் பயணிகள் அனைவருக்கும் நேர்வழி கிடைக்க பிரார்த்திப்போம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.