![]() |
கோப்பு படம் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே கீழத்தோட்டம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் மா.பழனியப்பன் (25). இவர் மனைவி உமா (23). இருவருக்கும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில், அண்மையில் வீட்டிலுள்ள விறகு அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராமல் உமா சேலையில் தீப்பிடித்துக் கொண்டதாம், இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட உமா அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) இரவு உயிரிழந்தார்.
புகாரின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருமணமான 5 ஆண்டுகளில் உமா இறந்துள்ளதால் அவர் சாவுக்கு வரதட்சிணைக் கொடுமை காரணமா என்பது குறித்து தஞ்சை வருவாய்க் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.