.

Pages

Tuesday, July 18, 2017

இருபக்கமும் இடி வாங்கிய சவுதி வாழ் இந்தியர்கள் !

அதிரை நியூஸ்: ஜூலை 18
சவுதிவாழ் இந்தியர்கள் பலர் பொது மன்னிப்பு மற்றும் வெளிநாட்டவர்கள் தொடர்பில் விதிக்கப்பட்டுள்ள புதிய வரிகளால் சவுதியை விட்டு பெருமளவில் வெளியேறி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் அனுப்பும் கார்கோ பொருட்கள் மீதும் 41% ஜிஎஸ்டி வரிவதிக்கப்பட்டுள்ளதால் 'மத்தளத்திற்கு இருபுறமும் இடி' என்ற நிலையில் உள்ளனர்.

ஏற்கனவே அந்த கூடுதல் ஜிஎஸ்டி வரியால் அமீரக இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து நாம் எழுதியிருந்தாலும் தற்போது சவுதிவாழ் இந்தியர்களின் வேலைவாய்ப்புகள் நிச்சயமற்றுப் போயுள்ள நிலையில் மீண்டும் எழுத வேண்டிய தேவையேற்பட்டுள்ளது.

ஜூலை 1 ஆம் தேதிக்கு முன் அதாவது இரவோடு இரவாக 41% வரிச்சட்டம் கொண்டு வரப்படுமுன் சவுதியிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 500 டன் கார்கோ பொருட்கள் இந்திய விமான நிலையங்களில் இதுவரை கிளியரிங் செய்யப்படாமல் தேங்கியுள்ளன. மேலும், சவுதி விமான நிலையங்களிலும் சுமார் 90 டன் கார்கோ பொருட்கள் விமான ஏற்றப்படாமல் தேங்கியுள்ளன. இவை மீண்டும் சவுதிக்குள் திரும்ப எடுத்துச் செல்லப்படவுள்ளன.

பொதுவாக 15 நாட்களில் டோர் டெலிவரி செய்யப்படும் கார்கோ பொருட்கள் தற்போது 2 மாதங்கள் வரை தாமதமாகும் எனத் தெரிகிறது. 41% ஜிஎஸ்டி வரி செலுத்தும் இந்தியர்களின் கார்கோ மட்டுமே தற்போது ஓரளவு கிளியரிங் செய்யப்படுகிறது. தாமதமாகும் மற்ற கார்கோகளுக்கு டேமரேஜ் எனப்படும் தாமத கட்டணமும் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.