அமீரகத்தில் கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் புதிய போக்குவரத்து விதிமீறல் சட்டங்கள் அமுலுக்கு வந்ததை தொடர்ந்து மீறல்களில் ஈடுபடுவோரை பிடிக்க ரகசிய ஆய்வாளர்களின் கெடுபிடியும் அதிகமாகியுள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், சிகரெட் துண்டுகள், டிஷ்யூ பேப்பர்கள், பானங்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் போன்ற அனைத்து வகையான கழிவுகளையும் வாகனத்திலிருந்து எரிந்தால் 1,500 திர்ஹம் அபராதத்துடன் 6 கரும்புள்ளிகளை பெறவேண்டியிருக்கும் என துபை போலீஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதே குற்றத்திற்கு முன்பு 500 திர்ஹமும் 4 கரும்புள்ளிகள் மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டது.
வாகனத்திலிருந்து குப்பைகளை எரிவது தற்போது 2 குற்றங்களாக கருதப்படும். முதலாவது வாகனத்திலிருந்து குப்பையை எரிவது போக்குவரத்து சட்டப்படியும், இரண்டாவதாக சாலையை குப்பையையாக்குவது மாநகராட்சி விதிப்படியும் குற்றமாகும் என்பதால் துபை போலீஸாரும், துபை மாநகராட்சியும் தனித்தனியே அபராதம் விதிக்கவும் இச்சட்டம் வழிசெய்கின்றது.
குப்பையை வீசுவோரை பிடிக்க துபை போலீஸார் மற்றும் துபை மாநகராட்சியின் 154 குப்பை மேலாண்மை பிரிவைச் சேர்ந்த ஆய்வாளர் மற்றும் சூப்பர்வைஸர்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நாள்தோறும் 3 ஷிப்டுகளாக பணியாற்றுவார்கள். மேலும், டிரைவருடன் பயணியாக செல்லும் ஒருவர் குப்பையை எரிந்தாலும் டிரைவர் மீது 1000 திர்ஹமும் 6 கரும்புள்ளிகளும் விதிக்கப்படுமாம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.