தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் சார்பில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் திறந்த வெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக மாற்றுவதற்கான கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் இன்று 29-07-2017 நடைப்பெற்றது.
ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் கூறியதாவது;
வருகின்ற 30-09-2017 அன்று திறந்தவெளி கழிப்பிடமற்ற மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் அறிவிக்கப்படவுள்ளது. இதனை செயல்படுத்தும் விதமாக தற்பொழுது உள்ள 589 ஊராட்சிகளில் 244 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பிடமற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 345 ஊராட்சிகள் புதிதாக 87129 கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளது.
மேலும், 34292 கழிப்பிடங்கள் புரணமைக்கப்படவுள்ளன. இப்பணிகள் அனைத்தும் வருகின்ற 30-09-2017 முடிப்பதற்கு அனைத்து உதவி இயக்குநர் நிலையான அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்(கி,ஊ-வ,ஊ) உதவி –ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணிமேற்பார்வையாளர்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கள அலுவலர்கள் ஒருங்கிணைத்து பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டு பணிகள் முடிக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.
இப்பணிகள் அனைத்தும் விரைவாக நிறைவுபெற பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை கேட்டுக்கொண்டுள்ளார்,
இவ்ஆய்வுக்கூட்டத்தில் பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார், திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை பி. மந்திராசலம், ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் கு. இந்துபாலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்(ஊ,வ) சு.சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.