.

Pages

Sunday, July 16, 2017

அதிரையில் முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் விற்பனை நிறுவனம் திறப்பு (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் தரகர் தெரு சாலையில் புதிதாக 'திரியெம் ஸ்போர்ட்ஸ்' சாதனங்கள் விற்பனை நிறுவனத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திரியெம் ஸ்போர்ட்ஸ் நிறுவன உரிமையாளர் திரியெம் பஷீர் அகமது தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக காதிர் முகைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர் கலந்துகொண்டு , வாழ்த்துரை வழங்கி நிறுவனத்தை திறந்து வைத்தார்.

முதல் விற்பனையை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. மகபூப் அலி தொடங்கி வைத்தார். முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் எம். பைரவநாத தேவர் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக, ஏ.முஹம்மது அலீம் வரவேற்று பேசினார். முடிவில் முத்துப்பேட்டை அல் மஹா மகளிர் அரபிக் கல்லூரி முதல்வர் ஏ.இப்ராஹீம் அன்சாரி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், சமூக ஆர்வலர்கள் ஜலீலா எஸ்.எம் முகமது முகைதீன், 'நாவலர்' நூர் முஹம்மது, 'அஜ்வா' நெய்னா, மான். அப்துல் ரஹ்மான், அபூபக்கர் சித்திக் மற்றும் முத்துப்பேட்டை எம்.டபுள்யூ.எஃப் தலைவர் எச். ஜின்னா, ஆசாத் நகர் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டி துணைத் தலைவர் சேட் உள்ளிட்ட அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நிறுவன உரிமையாளர் திரியெம் பஷீர் அகமது கூறுகையில்;
'முத்துப்பேட்டையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக திரியெம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறோம். கல்வி நிறுவனங்கள், விளையாட்டுப் போட்டிகள் நடத்துனர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் அதிகம் மிகுந்த அதிரையில் முதன் முறையாக இந்நிறுவனத்தை தொடங்கி உள்ளோம். விளையாட்டுப் போட்டிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அனைத்து வகை ஸ்போர்ட்ஸ் சாதனங்கள் தரமான நிறுவனங்களில் நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும்.

அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளை சேர்ந்த கல்வி நிறுவனங்கள், விளையாட்டுப் போட்டிகளை ஏற்று நடத்தும் நிறுவனங்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும்' என்றார்.

நிறுவனத் தொடர்புக்கு: 8015559340
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.