அதிராம்பட்டினம், ஜூலை 26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள ஏரிபுறக்கரை ஊராட்சி ஆதம் நகர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வழங்கப்படாததைக் கண்டித்து, அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் அமர்ந்து திடீர் மறியலில் புதன்கிழமை காலை ஈடுபட்டனர்.
தகவலறிந்த, அதிராம்பட்டினம் காவல்நிலைய உதவி ஆய்வாளர்கள் அய்யாதுரை, ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் ஆதம் நகர் ஹனி சேக், பாவா பகுருதீன் உட்பட ஜமாத்தார்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இன்று மாலைக்குள் இப்பகுதியில் குடிநீர் விநியோகிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பட்டுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கோபாலகிருஷ்ணன், மறியலில் ஈடுபட்டோரிடம் உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
சாலை மறியலையொட்டி, அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையில் வாகன போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாதிப்படைந்தது. பின்னர் போலீசாரால் வாகன போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.