தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் 2017-2018 ஆம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு, இலவச நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் மற்றும் மாவட்ட ரம்ஜான் விழா லாவண்யா திருமண மஹாலில் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லயன்ஸ சங்க மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ். முகம்மது ரஃபி புதிய நிர்வாகிகளை பதவியில் அமர்த்தி வாழ்த்துரை வழங்கினார். இதில், லயன்ஸ் சங்கம் அதிராம்பட்டினம் தலைவராக எஸ்.எம். முகம்மது முகைதீன், செயலராக அப்துல் ரஹ்மான், பொருளாளராக எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் பொறுப்பேற்றனர்.
லயன்ஸ் சங்க புதிய உறுப்பினர்களுக்கு மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.டி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவில், ரூ. 15 ஆயிரம் மதிப்பில், மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர சைக்கிள், புற்றுநோயால் பாதிப்படைந்த சிறுவனுக்கு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டது.
லயன்ஸ் சங்க மண்டலத் தலைவர் எஸ்.டி.எஸ் செல்வம், மாவட்ட அமைச்சரவை நிதி ஆலோசகர் பேராசிரியர் எம்.ஏ முஹம்மது அப்துல் காதர், வட்டாரத் தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
பணியேற்பு விழாவிற்கு லயன்ஸ் சங்க முன்னாள் தலைவர் ஆறுமுகச்சாமி தலைமை வகித்து வரவேற்றார். லயன்ஸ் சங்கச் செயலர் முத்துகிருஷ்ணன் கடந்த ஆண்டில் லயன்ஸ் சங்கம் ஆற்றிய சேவைத் திட்டங்கள் குறித்து பட்டியலிட்டு பேசினார். முடிவில் செயலர் அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.
இதையடுத்து, அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் மற்றும் அதிராம்பட்டினம் தீன் மருத்துவ ஆய்வகம் இணைந்து நடத்திய இலவச நீரிழிவு நோய் கண்டறிதல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகம்மது முகைதீன் தலைமை வகித்தார். தீன் மருத்துவ ஆய்வக நிறுவனர் சம்சுதீன், லயன்ஸ் சங்கச் செயலர் அப்துல் ரஹ்மான், பொருளாளர் எஸ்.ஏ அப்துல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தார்.
முகாமை மாவட்டத் தலைவர் க.பழனியப்பன் தொடங்கி வைத்தார். முகாமில் தீன் மருத்துவ ஆய்வகக் குழுவினர் பயனாளிகளுக்கு இரத்தத்தில் உள்ள நீரிழிவு நோய் அறிகுறியை கண்டறிந்து கூறினார். இதில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
விழா முடிவில், லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.எம் முகம்மது முகைதீன் நன்றி கூறினார். விழாவில் லயன்ஸ் சங்கத்தினர், அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம பஞ்சாயத்தார்கள், சேவை அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அதிரை லயன்ஸ் சார்பில்... விழாவில், ரூ. 15 ஆயிரம் மதிப்பில், மாற்றுத்திறனாளி நபருக்கு மூன்று சக்கர சைக்கிள், புற்றுநோயால் பாதிப்படைந்த சிறுவனுக்கு மருத்துவ உதவித்தொகை மற்றும் ஏழை மாணவிக்கு கல்வி உதவித்தொகை ஆகியன வழங்கப்பட்டது...ஒவ்வொரு ஆண்டு அறிக்கையில் இப்படி தான் இருக்கும்போல பரவாயில்லை.. அதென்ன "மாவட்ட ரம்ஜான் விழா " இதன் செயல்பாடு என்னன்னு சொல்லாம ஒரு விழா அதற்க்கு ஒரு தலைமை... கொஞ்சம் பார்த்தீங்கன்னா அமைப்பிற்கு ஒரு குறிப்பிட்டவர்கள் தான் மீண்டும் மீண்டும் பதவி வழங்கப்படுகிறது அதிரையில் வேற யாரும் இல்லையா அல்லது ஒரு சம்பிரதாயமா? இவ்வமைப்பின் சார்பாக அதிரையில் ஏதாவது ஒரு கலந்தாய்வு நிகழ்ச்சி ... ம்ஹும்.
ReplyDelete