.

Pages

Saturday, July 15, 2017

தஞ்சையில் புத்தகத் திருவிழா தொடக்கம் ( படங்கள் )

தஞ்சாவூர் மாவட்டம், அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா அரங்க திறப்பு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில், மாநிலங்களவை உறுப்பினர் ஆர். வைத்திலிங்கம் முன்னிலையிலும், வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் இன்று (15.07.2017) திறந்து வைத்தார்.

வேளாண்மைத்துறை அமைச்சர் திரு.இரா.துரைக்கண்ணு அவர்கள் புத்தக திருவிழா அரங்கத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
புத்தக திருவிழா, மாண்புமிகு முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்கள் ஆட்சியில் தான் புத்தக திருவிழா கொண்டு வரப்பட்டது.  ஒரு மனிதன் புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் சிறந்த பண்பாளராக உருவாக முடியும்.

புத்தகம் படிப்பதால் மனிதர்களின் அறிவு ஆற்றலை வளர்த்துக் கொள்ளவும், மாணவ மாணவிகள் கல்வித் திறனை வளர்த்துக்கொள்ளலாம். பல்வேறு பதிப்பு ஆசிரியர்கள் எழுதியுள்ள நூல்கள் பல்வேறு வடிவங்களாக இந்த அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.  தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தக திருவிழா மூன்றாவது ஆண்டாக நடக்கிறது.  இந்த ஆண்டு நடைபெறும் புத்தக திருவிழாவில் 103 அரங்குகள் அமைக்கப்பட்டு 73 பதிப்பு ஆசிரியர்களின் புத்தகங்கள் பங்கு பெற்றுள்ளது.  இன்று (15.07.2017) தொடங்கி  வருகின்ற 24.07.2017 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.  தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்  (TNPSC)  நடத்தும் போட்டித் தேர்வுகளுக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்,  குரூப் 1, குரூப் 2, குரூப் 4 ஆகிய போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்திக் கொள்ள தேவையான பதிப்பாசிரியர்களின் புத்தக வெளியீடுகள் இந்த அரங்கத்தில் அதிகளவில் பங்கு பெற்றுள்ளது.  பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள்  பட்டயப்படிப்பு முடித்தவுடன் போட்டித் தேர்வுக்கு தயார்ப்படுத்திக் கொள்ள  இந்த புத்தகங்கள் பெரும் உதவியாக இருக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை மாணவ மாணவியர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  பொது மக்களும் புத்தகங்கள் படிக்கம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.  புத்தகங்கள் படிப்பதனால் சிறந்த பண்பாளராக உயர முடியும்.  தஞ்சாவூரில் நடைபெறும் புத்தக திருவிழாவில் பொது மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சாவூர் சட்ட மன்ற உறுப்பினர் எம்.ரெங்கசாமி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை திருஞானம், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் ஆவின் தலைவர் ஆர்.காந்தி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் எஸ்.மோகன், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், நிலவள வங்கி தலைவர் துரை.வீரணன், மொத்த கூட்டுறவு பண்டகசாலை தலைவர் வி.பண்டரிநாதன், நிக்சல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் புண்ணியமூர்த்தி, நிக்சல்சன் கூட்டுறவு வங்கி இயக்குநர் சரவணன், துணை தலைவர் அறிவுடைநம்பி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், வட்டாட்சியர் தங்கபிரபாகரன், முதன்மை  கல்வி அலுவலர் சுபாஷினி, சுற்றுலா அலுவலர் ராஜசேகர்,கல்வி புரவலர் ரமேஷ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.