அதிராம்பட்டினம், ஜூலை 20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (WSC) சார்பில் 17 ஆம் ஆண்டு, எம்.எம்.எஸ் அப்துல் வஹாப் நினைவு மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி பரிசளிப்பு விழா மேலத்தெரு மைதானத்தில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
அதிராம்பட்டினம் வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் (WSC) சார்பில் 17 ஆம் ஆண்டு, எம்.எம்.எஸ் அப்துல் வஹாப் நினைவு மாநில அளவிலான மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கியது. இதில், சென்னை, பாண்டிச்சேரி, ஈரோடு, அய்யம்பேட்டை, மயிலாடுதுறை, தொண்டி, கீழக்கரை, திருப்பாலக்குடி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட 16 அணிகள் கலந்துகொண்டு விளையாடியது.
இதில் அதிராம்பட்டினம், தொண்டி, பாண்டிச்சேரி, மயிலாடுதுறை ஆகிய நான்கு அணிகளுக்கிடையே நடந்த அரை இறுதி ஆட்டத்தில் அதிராம்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய அணிகள் வெற்றிபெற்று, இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து புதன்கிழமை இரவு இரு அணிகளுக்கிடையே நடந்த இறுதி ஆட்டத்தில், 25 க்கு 22, 26 க்கு 24, 25 க்கு 21 என்ற செட் கணக்கில் மயிலாடுதுறை அணி வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
இதைத்தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அணிக்கு ரூ.15 ஆயிரம், இரண்டாமிடம் பிடித்த அதிராம்பட்டினம் அணிக்கு ரூ.12 ஆயிரம், மூன்றாமிடம் பிடித்த பாண்டிச்சேரி அணிக்கு ரூ.10 ஆயிரம், நான்காமிடம் பிடித்த தொண்டி அணிக்கு ரூ. 8 ஆயிரம் ஆகிய ரொக்கப்பரிசுகள், சுழற்கோப்பைகள், பதக்கங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
தொடரில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய அதிராம்பட்டினம் அணியைச் சேர்ந்த ராஜேஷ், புருசோத்தமன், பாண்டிச்சேரி அணியை சேர்ந்த செந்தில், மயிலாடுதுறை அணியை சேர்ந்த அந்தோணி ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில், சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தாஜுல் இஸ்லாம் சங்கம் நிர்வாகிகள் பி.எம்.கே தாஜுதீன், ம.செ. ஜபருல்லா, வி.டி அஜ்மல்கான், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஏ.மகபூப் அலி, முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் ஆகியோர் பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். விழா ஏற்பாட்டினை நூவண்ணா நூர் முஹம்மது, சாகுல் ஹமீது ஆகியோர் செய்தனர். ஆட்ட நடுவராக பாரதி, நிகழ்ச்சி தொகுப்பினை பேராசிரியர் நாசர், ஜபருல்லா ஆகியோர் செய்தனர். விழாவில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.