அதிரை நியூஸ்: ஜூலை 24
பாலைவனத்தில் அமைந்துள்ள அபுதாபி விவசாய நாடல்ல எனினும் இங்கு விவசாய மேலாண்மையும், விவசாய நலன்களும் திட்டமிட்டு பேணப்படுகின்றன ஆனால் நம் தமிழக விவசாய மண் திட்டமிட்டு பாலைவனமாக்கப்படுகின்றது, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதுடன் தலைநகர் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகின்றான். எனினும், மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை.
அபுதாபியில் அரசின் சார்பில் செயல்படும் விவசாயிகள் சேவை மையம் (Farmer's service Center) சுமார் 24,018 விவசாயப் பண்ணைகளை ஒருங்கிணைத்து வருடாவருடம் செய்ய வேண்டிய விவசாயப் பணிகளை திட்டமிடுகின்றது. இந்த வருடத்திற்கு தேவையான பயிர்கள், காய்கறிகள் எவை? அபுதாபியின் எந்தெந்த பகுதிகளுக்கு என்னென்ன காய்கறிகள் தேவைப்படுகின்றன. எங்கெங்கு அவற்றை லாபத்துடன் விற்பனை செய்யலாம் என்ற ஆய்வை வழங்குவதுடன் அறுவடைக்குப் பின் விற்பனைக்கு ஏற்றவகையில் அவற்றை முறையாக பெட்டிகளில் அடைத்து (Packing) விவசாயிகளுக்காக மார்க்கெட்டுகளில் விற்பனை செய்தும் தருகின்றன.
2017 – 2018 எனும் இந்த வருட விவசாய காலம் எதிர்வரும் ஆகஸ்ட் மாத மத்தியில் துவங்கி சுமார் 47 வாரங்களுக்கு நீடிக்கும். இவற்றில் 15 வாரங்கள் பலன் நிறைந்த அறுவடை காலங்களாக மதிப்பிடப்பட்டுள்ளன. இந்த வருடம் 21 வகை பயிர்களுடன் சுமார் 38 வகை காய்கறிகளும் பயிரிடப்படவுள்ளன. இந்தக் காய்கறிகள் உள்நாட்டில் சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்யப்படுவதால் குறைந்த விலைக்கும் ஃபிரஷ்ஷாகவும் மக்களுக்கு கிடைக்கின்றன. மொத்தத்தில் விவசாயி, மக்கள் என அனைவருக்கும் லாபம்.
விவசாயிகள் சேவை மையங்கள் விவசாய பண்ணைகள் உள்ள ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள் எளிதாக அணுகும் வகையில் பல கிளைகளுடன் செயல்படுகின்றன. இதில் ஒன்றே ஒன்றை இரவல் கேட்டு நம் தமிழகத்திற்காக வாங்கினால் என்ன ? என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா?
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.