.

Pages

Wednesday, July 19, 2017

குவைத் 'இமராத்' குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் தண்ணீர் அன்பளிப்பு!

அதிரை நியூஸ்: ஜூலை 19
குவைத்தை சேர்ந்த தம்பதிக்கு கடந்த ஜூலை 1 ஆம் தேதி அழகிய பெண் குழந்தை பிறந்தது. இக்குழந்தை அத்தம்பதிக்கு 2 வது குழந்தையாகும்.

குழந்தையின் பெற்றோர் இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விஜயம் செய்ததில்லை என்றாலும் அமீரகத்தை நேசிக்கக்கூடியவர்களாக இருந்துள்ளனர். இந்த நேசத்தின் விளைவாக தங்களுக்கு பிறந்த 2 வது குழந்தைக்கு 'இமராத்' எனப் பெயரிட்டனர்.

இந்த செய்தியை அறிந்த அமீரகத்தை சேர்ந்த தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனமான வைவேரா (WAIWERA) 'இமராத்' என குவைத் குழந்தைக்கு பெயரிட்டதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'இமராத்' எனும் அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தண்ணீரை அன்பளிப்பாக அதுவும் குவைத்திலேயே வழங்க முன்வந்துள்ளது.

இன்றைய உலகில் தண்ணீரை அன்பளிப்பாக பெற்றுக் கொள்வதும், அதை மனமுவந்து தருவதும் விலைமதிக்க முடியாத செயல் தான் என்றால் அது மிகையில்லை.

விந்தை மனிதர்கள்! விந்தை உலகம்!!

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.