.

Pages

Thursday, July 27, 2017

தஞ்சையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்தாய்வுக் கூட்டம் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 வருடங்களுக்கு மேற்பட்ட பழுதடைந்த சிறுபான்மையினர் ஆலயங்கள் சீரமைக்க தமிழக அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படுகின்றது. சிறுபான்மைனயினர் ஆணைய தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் அவர்கள் தகவல்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட பிற்பட்டோர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில், மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் அவர்கள் தலைமையில் இன்று (27.07.2017) நடைபெற்றது.

இஸ்லாமிய மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த 8 பயனாளிகளுக்கு ரூ.48 ஆயிரம் மதிப்பிலான 8 தையல் இயந்திரங்களும், 14 பயனாளிகளுக்கு ரூ.57400 மதிப்பிலான 14 அரவை இயந்திரங்களும்,  கூட்டுறவு சங்கத்தின் மூலம் டாம்கோ கடன் வழங்கும் திட்டத்தின் கீழ் 31 பயனாளிகளுக்கு ரூ.21,48,750 மதிப்பிலான கடனுதவிகளும் என மொத்தம் 63 பயனாளிகளுக்கு ரூ.22,48,150 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது;

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சிறுபான்மையின மக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஜெயின் சமூகத்தை சேர்ந்த சிறுபான்மையின மக்கள் கலந்து கொண்டு தங்கள் தேவைகளை தெரிவித்தார்கள். குறிப்பாக இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு கல்லறை தோட்டம் வேண்டுமென்றும், ஆலயம் மற்றும் பள்ளிவாசல்களுக்கு தமிழ்நாடு மின் வாரியம் மூலம் வழங்கப்படும் மின் இணைப்பு படிவம் சி2ன்படி வழங்குவது இல்லையென்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

தமிழக அரசின் சார்பில் பழுதடைந்த 10 முதல் 15 ஆண்டுகள் காலமான ஆலயங்களுக்கு ரூ.1 இலட்சம் வரை 15 ஆண்டு முதல் 20 ஆண்டுகளுக்கு மேலான ஆலயங்களுக்கு ரூ.2 இலட்சமும், 20 ஆண்டுகளுக்கு மேல் உள்ள ஆலயங்களுக்கு ரூ.3 இலட்சம் வரை புனரமைப்பு செய்ய நிதி வழங்கப்படுகிறது. இதை உரிய படிவத்தில் மூலம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்த வரை சிறுபான்மையின மக்கள் அமைதியாக வாழ்கின்றனர்.  எந்தவொரு பெரிய அசாம்பாவிதம் நடைபெற வில்லை. மாவட்ட நிர்வாகத்திற்கு எனது பாராட்டை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பேராயர் டாக்டர் எம்.பிரகாஷ் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் யு.சுதிர்லோத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி மற்றும் சிறுபான்மையினர் உறுப்பினர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.