அம்மா மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர் மென்பொருள் குறுந்தகட்டினை வெளியிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை பேசியதாவது;
உலகத்தில் உள்ள மொழிகளில் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழியாக தமிழ் மொழி இருந்துள்ளது. மற்ற மொழிகளுக்கு கால வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் தமிழ் மொழியும் உலக அரங்கில் மென்பொருள் சிறந்து விளங்குகிறது. அனைத்து அரசு அலுவலகங்களின் செயல்பாடுகளும், முழுமையாக தமிழில் அமைதல் வேண்டும். அந்த வகையில் கணினி தொழில் நுட்ப வளர்ச்சிக்கேற்ப தமிழ் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கணினியில் ஆங்கில மொழிகளுக்கென பிழை திருத்தி இருப்பதை போல், தமிழில் ஒற்றுப்பிழை, சந்தி, மயங்கொலி உள்ளிட்ட இலக்கணப் பிழைகள் ஏதுமின்றி வரைவுகளை தயார் செய்யும் வகையில், “அம்மா மென்தமிழ்ச் சொல்லாளர்” என்னும் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்-ஆங்கில அகாரதி, அயற்சொல் அகாரதி, மயங்கொலி சொல் அகாரதி, தமிழ்நாடு ஆட்சிச் சொல்லகராதி ஆகிய மின்னகராதிகளாக இம்மென்பொருளில் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற மொழிகளுக்கேற்றாற் போல் நாம் தமிழ் மொழியில் கணினியில் மாற்றிக் கொள்ள இந்த அம்மா மென்தமிழ் உருவாக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழத்தில் மென்பொருள் குறுந்தகடு அனைத்துத்துறை அரசு அலுவலர்களுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அம்மா தமிழ் மென்பொருள் முழுமையாக பயன்படுத்தி மேன்மேலும் தமிழ் மொழி வளர்ச்சியடைவதற்கும் கணினியுடன் மென் தமிழ் பயன்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கணினி பயன்படுத்தும் அனைத்து நபர்களும் அம்மா தமிழ் மென்பொருள் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இவ்விழாவில் தமிழ் வளர்ச்சி இயக்குநர் கோ.விசயராகவன், மொழி பெயர்ப்பு துறை இயக்குநர் ந.அருள், கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குநர் இரா.குணசேகரன், தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் க.பொ.இராசேந்திரன், பேராசிரியர் ந.தெய்வசுந்தரம், தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் ச.முத்துக்குமார் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம் மற்றும் பல்வேறுத் துறை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.