.

Pages

Thursday, July 27, 2017

துப்புரவு மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி (படங்கள்)

தஞ்சாவூர் மாநகராட்சி புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி சார்பில் ஒட்டுமொத்த கூட்டு துப்புரவு பணி மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (27.07.2017) வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொது மக்களிடம் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் மற்றும் 589 ஊராட்சி பகுதிகளிலும் இன்று ஒட்டு மொத்த கூட்டு துப்புரவு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி பகுதியில் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அதிக நீர் தேங்கியுள்ள இடங்களில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாநகராட்சி சார்பில் அபேட் மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.  மழை நீர் தேங்கும் இடம், கால்வாய்களில் பாலிதீன் பைகள் மற்றும் குப்பைகளை பொது மக்கள் கொட்டக்கூடாது. மற்றும் தங்கள் வீட்டு பகுதிகளில் தேங்காய் ஓடு, பழைய டயர்கள், பழைய பாத்திரங்கள், பிளாஸ்டிக் டப்பாகள் போன்றவற்றை தண்ணீர் தேங்கா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். அதனை உடனடியாக மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கொடுத்து தங்கள் பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் பயன்படுத்தும் நீரினை மூன்று நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது. நல்ல தண்ணீரில் தான் டெங்கு கொசுக்கள் அதிகமாக உற்பத்தியாகின்றது. எனவே தண்ணீர் நிரப்பி வைத்திருக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும். வீட்டில் சேரும் பைகளை மொத்தமாக சேகரித்து துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்ந்து உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.   மாவட்ட நிர்வாகம் மற்றும் பொது மக்கள் அனைவரும் சேர்ந்து தூய்மையான தஞ்சாவூர் மாவட்டத்தை உருவாக்குவோம் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

முன்னதாக துப்புரவு பணியாளர்களிடம் பொது மக்களுக்கு டெங்கு கொசு உற்பத்தி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பணி செய்யும் பொழுது முறையான உபகரணங்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். வீட்டு வசதி வாரிய நீர் தேக்க தொட்டிகளை முறையாக மூடி வைக்கவும், கழிவு நீர் தேங்கா வண்ணம் மண் போட்டு நிரப்பிடவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், மாநகராட்சி ஆணையர் வரதராஜ், செயற்பொறியாளர் ராஜ்குமார், செயற்பொறியாளர் (திட்டம்) வரதராஜன், மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.