.

Pages

Wednesday, July 19, 2017

தஞ்சை மாவட்டத்தில் ஆன்லைன் பதிவு மூலம் மணல் விற்பனை: 3 யூனிட் மணல் ரூ.1620 மட்டும் !

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இணைய சேவை மூலம் மணல் விநியோகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை
இன்று (19.07.2017) புதன்கிழமை தொடங்கி வைத்தார்

மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இணைய சேவை மணல் விநியோகத்தை ( Online Booking )  தொடங்கி வைத்து தெரிவித்ததாவது;
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் கடந்த 02.06.2017 அன்று தமிழ் நாடு முழுவதும் இணைய சேவை மூலம் மணல் விநியோகத் திட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.  அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிகளும், இணைய சேவை மூலம் மணல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  நமது மாவட்டத்தில் விட்டலபுரம், நடுப்படுகை, கோவிலடி ஆகிய மூன்று இடங்களில் மணல் குவாரிகள் துவக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது. மணல் தேவைப்படும் பொது மக்கள் www.tnsand.in என்ற இணைய தள முகவரியில் பதிவு செய்து அதற்குண்டான அனுமதி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.  இரண்டு யூனிட் மணல் விலை ரூ.1080  3 யூனிட் மணல் விலை ரூ.1620 ஆகும்.

டி.டி. எடுக்க வேண்டிய முகவரி:
EE PWD/WRD/M&M Division,  Payable at Trichy என்ற முகவரிக்கு டிடி எடுத்து வர வேண்டும்.

மணல் குவாரி இணைய சேவை இயங்கும்  நேரம் : 
காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.

பொது மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பயிற்சி ஆட்சியர் சி.பி.ஆதித்யா செந்தில்குமார், சுரங்கம் மற்றும் கண்காணிப்பு உபகோட்டம், பொதுப் பணித் துறை உதவி செயற்பொறியாளர்கள் ஆர்.சுப்பையன், எம்.வீரமுத்து, ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் உடன் கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.