.

Pages

Saturday, July 15, 2017

குவைத்திலிருந்து 88 வெளிநாட்டு தொழிலாளர்கள் நாடு கடத்த திட்டம் !

அதிரை நியூஸ்: ஜூலை 15
குவைத்தில் அவ்வப்போது அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினர் மற்றும் தலைமறைவு குற்றவாளிகளை பிடிப்பது வழக்கம். அதன்படி கடந்த புதன்கிழமை அன்று அல் அஹ்மதி கவர்னரேட் பகுதியில் நடைபெற்ற அதிரடி சோதனையில் சிக்கிய 88 வெளிநாட்டவர்கள் விரைவில் நாடு கடத்தப்படவுள்ளனர்.

அதேபோல் வெளிநாட்டு தொழிலாளர்கள் தவறிழைப்பதற்கு காரணமான ஸ்பான்சர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் 'பிளாக் லிஸ்ட்' எனும் கருப்பு பட்டியலின் கீழ் கொண்டு வரப்பட்டு மேற்கொண்டும் அவர்கள் புதிய விசாக்கள் பெற தடைவிதிக்கப்பெறுவர்.

இத்தகைய அதிரடி சோதனைகளில் சிக்குபவர்கள் பெரும்பாலும் ஆசியா நாடுகள் மற்றும் அரபு பிரதேசங்களை சார்ந்தோரே அதிகம். அவர்களில் பலர் முறையான ஆவணங்கள் இன்றியும், விசா காலாவதியான பின் புதுப்பிக்காதவர்களும், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களும், தங்களுடைய ஸ்பான்சர்களிடமிருந்து ஓடிவந்து வெளியே வேலை செய்பவர்களுமே அதிகம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.