.

Pages

Monday, July 24, 2017

ஹஜ் செய்திகள்: கத்தார் நாட்டு ஹஜ் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாடு!

அதிரை நியூஸ்: ஜூலை 24
சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் கத்தார் நாட்டுடனான தங்களுடைய ராஜியரீதியிலான உறவுகளை கடந்த ஜூன் மாதம் முறித்துக் கொண்டதுடன் தரை மற்றும் வான்வழி போக்குவரத்துக்களையும் துண்டித்துக் கொண்டதும் அறிந்ததே.

இந்நிலையில் அடுத்த மாதம் புனித ஹஜ் கிரிகைகள் துவங்குவதையொட்டி கத்தார் நாட்டிலிருந்து வரும் ஹஜ் பயணிகளுக்கு மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஹஜ் கடமைகளை நிறைவேற்ற அனுமதி தந்துள்ளது சவுதி அரேபியா. கத்தார் பிரஜைகளுக்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் அனுமதியில்லை என்று முன்னதாக வெளியான செய்தியையும் மறுத்துள்ளனர்.

ஹஜ்ஜூக்கு வரும் கத்தார் யாத்ரீகர்கள் ஜெத்தா கிங் அப்துல் அஜீஸ் விமான நிலையம் மற்றும் மதீனா இளவரசர் முஹமது பின் அப்துல் அஜீஸ் விமான நிலையம் ஆகிய 2 விமான நிலையங்கள் வழியாக மட்டுமே வர முடியும். மேலும் அவர்கள் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தை தவிர்த்து வேறு எந்த விமான சேவைகளையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.