![]() |
மறைந்த டி.தாஜுதீன் |
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்த எம்.எஸ் தப்ரூல் ஆலம் பாதுஷா மகன், டி. தாஜுதீன் (வயது 44). இவர் சவூதி அரேபியா, அபஹா பகுதியில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் 25ந் தேதி மாரடைப்பால் காலமானார்.
இதையடுத்து, மறைந்த டி. தாஜுதீன் உறவினர்களும், நண்பர்களும், சவூதிஅரேபியா ஜித்தாவில், செயல்பட்டுவரும் 'அய்டா' பொதுநல சேவை அமைப்பின் தலைவர் அதிரை ரஃபியா மற்றும் தன்னார்வல அதிரை இளைஞர்கள் அகமது முனாஸ்கான், பாட்டன் வீட்டு தஸ்லீம், ரிழ்வான், பயாஸ் அகமது உள்ளிட்டோரை தொடர்புகொண்டு, 'ஜனாஸா' நல்லடக்கத்தை சவுதியில் நிறைவேற்றக் கேட்டுக்கொண்டனர். அதன்படி, சவூதி அரேபியாவில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியோடு இறப்பு தொடர்பான அனைத்து சான்றிதழ்கள் பெறப்பட்டு, சவூதி இந்தியன் சோஷியல் ஃபாரம் அமைப்பினரின் உதவியோடு சவூதி அரேபியா நேரப்படி இன்று புதன்கிழமை லுஹ்ர் தொழுகைக்கு பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஜனாஸாவை நல்லடக்கம் செய்வதற்கும், இறப்பு தொடர்பான சான்றிதழ் பெரும் வேலைக்காகவும் தீவிரமாக களப்பணியாற்றிய, அய்டா சேவை அமைப்பின் தலைவர் அதிரை ரஃபியா, அதிரை அகமது முனாஸ்கான், பாட்டன் வீடு தஸ்லீம், ரிழ்வான், பயாஸ் அகமது, கமிஷ் முசைத் பகுதி அதிரையர் பிலால், ஹாலித் மற்றும் இந்தியன் சோஷியல் ஃபாரம் அமைப்பினர் ஆகியோரின் உதவிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
![]() |
உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட பகுதியில் தன்னார்வலர்கள் |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.