தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக வழக்கத்தை வீட கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், இப்பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை திடீர் மழை பெய்தது. இதனால் இப்பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் 10 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் அதிரையின் பிரதான வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழை நீடித்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றாலம், ஊட்டி போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா சென்ற நண்பர்கள் உடனடியாக தாயகம் வரவேண்டும்.
ReplyDeleteஅருமையான கிளைமேட் வாங்க வாங்க.
This comment has been removed by the author.
ReplyDelete