தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் எஸ்.எச் அஸ்லம். கடந்த 2011 ம் ஆண்டு முதல், 2016 ம் ஆண்டு வரை அதிரை பேரூராட்சி மன்றத் தலைவராக பொறுப்பில் இருந்தார். திமுக தலைவர் டாக்டர் கலைஞர், செயல் தலைவர் மு.க ஸ்டாலின், திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர் பாலு ஆகியோரின் தீவிர விசுவாசி. திமுக சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள், போராட்டங்கள், கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட பணிகளில் துடிப்புடன் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், திமுக மாநில பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஒப்புதலின் பேரில், முன்னாள் சேர்மன் எஸ். எச் அஸ்லமை, கட்சியின் சிறுபான்மையின நல உரிமைப்பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளராக நியமனம் செய்து, அக்கட்சியின் சிறுபான்மையின நல உரிமைப்பிரிவு மாநிலச் செயலர் டாக்டர் த.மஸ்தான் அறிவித்துள்ளார். இதையடுத்து திமுகவினர், நண்பர்கள், உறவினர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து சிறுபான்மையின நல உரிமைப்பிரிவு தஞ்சை தெற்கு மாவட்ட துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம் கூறுகையில்;
'திமுக தலைவர் டாக்டர் கலைஞர், பொதுச்செயலாளர் பேராசிரியர், செயல் தலைவர் தளபதி, திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர் டி.ஆர் பாலு, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் துரை. சந்திரசேகரன் எம்.எல்.ஏ, துணைச் செயலாளர் கா.அண்ணாதுரை ஆகியோருக்கு நன்றி. கட்சி வளர்ச்சிக்கும், சமூக மேம்பாட்டிற்கும் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்றுவேன். ஆதரவளிக்கும் அனைத்து சமூக பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி' என்றார்.
வாழ்த்துக்கள்
ReplyDelete