.

Pages

Saturday, July 29, 2017

மலேசியாவில் அதிரையரின் நூல் வெளியீட்டு விழா (படங்கள்)

அதிரை நியூஸ்: ஜூலை 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் 'கம்யூட்டர்' புகாரி. தமிழ் இலக்கியம் மீது தீராத பற்றுகொண்டவர். இவரது இலக்கியச் சேவையை பாராட்டி மலேசியா அரசு பல்வேறு விருதுகளை வழங்கி கெளரவித்துள்ளது. தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் மற்றும் மலேசிய கலை பண்பாட்டு சபா சார்பில் சிறப்பு விருதையும் பெற்றுள்ளார்.

மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் படித்து பயன்பெற வேண்டி 'வருங்காலத் தூண்கள்' என்ற விழிப்புணர்வு நூலை எழுதி இருக்கிறார். இந்நூலில் மலேசியா அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வாழ்த்துரை வழங்கி கெளரவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மலேசியாவில் வெளியாகும் பிரபல தமிழ் நாளிதழ்களில் கட்டுரை, சிறுகதை ஆகியவற்றை எழுதியுள்ளார். தமிழ் இலக்கியம் தொடர்பான பல்வேறு கருத்தரங்க, பேச்சரங்க நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்குபெற்று வருகிறார்.

இந்நிலையில், இந்நூலின் வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கடந்த புதன்கிழமை இரவு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மலேசியா இந்தியன் காங்கிரஸ் முஸ்லீம் சங்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ செனட்டர் செய்யது இப்ராகிம் தலைமை வகித்து, நூலை வெளியீட்டு வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக, மலேசியா இந்திய சமுதாய மேம்பாட்டு இயக்கத் தலைவர் எஸ்.பி மணிவாசகம் வரவேற்றுப் பேசினார். விழாவில் நூல் ஆசிரியர் அதிரை கம்ப்யூட்டர் புகாரி ஏற்புரை வழங்கி அனைவருக்கும் நன்றி கூறினார். இவ்விழாவில் பல்வேறு துறைகளை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
 
 
 
 
 
 
 
 
 
'வருங்காலத் தூண்கள்' நூல்

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றம் மற்றும் மலேசிய கலை பண்பாட்டு சபா சார்பில் சிறப்பு விருது பெற்ற போது...

2 comments:

  1. வாழ்த்துக்கள்
    மணிச்சுடர் நாளிதழின் தஞ்சை தெற்கு மாவட்ட நிருபர், சாவன்னா

    ReplyDelete
  2. இலக்கிய - மொழிப்பற்று, பன்முக தன்மைகொண்ட நம் மக்கள் இருக்கிறார்கள் என்பதில் பெருமைதான்., கப்யூட்டர் புகாரின் படைப்புகள் மாணவர்களுக்கு ஒரு உத்வேகத்தை கொடுப்பதாக இருக்கு., சமுதாய சிந்தனையோடு தொடர்ந்து படைப்புகள் வெளிவர வாழ்த்துக்கள் .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.