அதிரை நியூஸ்: ஜூலை 16
எதிர்வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் ஹஜ் கிரிகைகள் துவங்க உள்ளது. ஹஜ் யாத்திரைக்காக வரும் அல்லாஹ்வின் விருந்தினர்களுக்கு பல்வேறு நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வருடந்தோறும் வழமையாக சவுதி அரசு கடுமையாக பின்பற்றி வருகிறது.
மேலும், சவுதி அரேபியாவில் காலரா போன்ற ஆட்கொல்லி தொற்று வியாதிகள் அண்மைய பல வருடங்களில் ஏற்பட்டதேயில்லை என்றாலும் காலரா தொற்றுக்கள் உள்ள நாடுகளிலிருந்து வரக்கூடிய நபர்கள் மூலம் பரவலாம் என்பதால் மேலும் கவனமாக செயல்படுமாறு ஐ.நா.வின் உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தற்போது போர் நடைபெற்று வரும் ஏமனில் காலரா நோய் தாக்குதல்கள் தென்படுகின்றன. மேலும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் அதற்கான அறிகுறிகள் தென்படுவதால் ஹஜ் காலத்தின் போதும், யாத்ரீகர்கள் நாடு திரும்பிய பின்னரும் காலராவால் பாதிக்கப்படலாம் என்பதால் வாழுமிட சுகாதாரம், சுத்தமான தண்ணீர் போன்றவை யாத்ரீகர்களுக்கு கிடைப்பதை சவுதி அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
ஹஜ் யாத்ரீகர்கள் நலமுடன் திரும்பவும், காலரா போன்ற கொடிய தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளின் மக்கள் குணம் பெறவும் எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இறைஞ்சுவோம்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.