.

Pages

Friday, July 21, 2017

தஞ்சை அருகே பயங்கர தீ விபத்து: 65 குடிசைகள் எரிந்து நாசம் !

தஞ்சை அய்யம்பேட்டை அருகே இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 65 குடிசைகள் எரிந்தன.

அய்யம்பேட்டையை அடுத்த சக்கராபள்ளியில் அதிகாலை 3 மணியளவில் குடிசை வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ, மற்ற வீடுகளுக்கும் பரவியது. அடுத்தடுத்து இருந்த 65 வீடுகளுக்கும் தீப்பரவியதால், குடிசைகளில் இருந்த 10க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் வெடித்துச் சிதறின.

இதுகுறித்து தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து திருவையாறு, திருகாட்டுப்பள்ளி, பாபநாசம், கும்பகோணம் பகுதிகளில் இருந்து வந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அண்ணாதுரை, சட்டப்பேரவை உறுப்பினர் ரங்கசாமி ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கினார்கள்.

தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசின் நிவாரண உதவித் தொகையாக  ரூ.5000 பணம்,  விலையில்லா அரிசி, மண்ணெணெய், வேட்டி, சேலை மற்றும் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5000 ரொக்க பணமாக வழங்கி வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்ததாவது:

சக்கராப்பள்ளி முகமதியர் தெருவில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் 52 வீடுகள் சேதமடைந்துள்ளது.  இதில் எந்தவித உயிர் பாதிப்பும் இல்லை. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கும்பகோணம் சார் ஆட்சியர் என அனைத்து உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து உடனடியாக தேவையான நிவாரண உதவிகளை செய்துள்ளனர்.

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் பகுதிகளிலிருந்து 6 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அனைத்து தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீயினால் பாதிப்படைந்து வீடுகளை இழந்தவர்கள் அருகில் உள்ள பள்ளி வாசலுக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் சார்பில் ஒரு குடும்பத்திற்கு நிவாரண உதவித் தொகையாக ரூ.5000 ரொக்க பணமாக விலையில்லா அரிசி, மண்ணெணெய், வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டுள்ளது.

அரசின் சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும் என வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு தெரிவித்தார்.
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.