அதிரை நியூஸ்: ஜூலை 15
உலகின் உயரமான கட்டிடமான புரூஜ் கலீபாவின் உச்சிக்கு செல்வதற்கு சிறப்பு தள்ளுபடி கட்டண சலுகையை எம்மார் நிறுவனமும் துபை போக்குவரத்து துறையும் இணைந்து அறிவித்துள்ளன.
புரூஜ் கலீபா உயரே செல்ல 125 திர்ஹம் வசூலிக்கப்பட்டு வருகிறது ஆனால் நடப்பு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மட்டும் காலை 9 மணிமுதல் பகல் 1 மணிவரை மட்டும் சிறப்பு கட்டணமாக 65 திர்ஹம் மட்டுமே வசூலிக்கப்படும் ஆனால் கட்டாயம் எமிரேட்ஸ் ஐடி வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இந்த சலுகை அமீரக ரெஸிடெ;ன்ஸ் விசா உள்ளவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களுக்கு 125 திர்ஹங்கள் வழமைபோல் வசூலிக்கப்படும்.
துபையிலுள்ள 47 மெட்ரோ நிலையங்களிலும் புரூஜ் கலீபா உச்சிக்கு செல்வதற்கான டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம். இந்த முன்பதிவு சலுகை விலை டிக்கெட்டுகளை துபை மாலில் அமைந்துள்ள புரூஜ் கலீபா மேலே செல்வதற்கு அனுமதிக்கும் A TOP எனும் கவுண்டரில் எமிரேட்ஸ் ஐடியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். அவர்கள் தளம் எண் 124 மற்றும் 125 வரை சென்று சுற்றிப் பார்க்கவும், டெலஸ்கோப் வழியாக துபையை ரசிக்கவும் அனுமதி தருவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
555 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள 148வது தளம் மற்றும் பிரிமியம் லவுஞ்சுடன் உள்ள மொட்ட மாடிக்கு சென்று ரசிக்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். தொகை எவ்வளவு என குறிப்பிடப்படவில்லை என்பதால் அதை துபை மால் கவுண்டரில் விசாரித்துக் கொள்ளவும்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.