.

Pages

Thursday, July 20, 2017

அபுதாபியில் 3 ஆண்டுகளாக கோமாவில் இருந்த தமிழர் ஊருக்கு அனுப்பி வைப்பு !

அதிரை நியூஸ்: ஜூலை 20
தமிழகத்தின் நமக்கல்லை சேர்ந்தவர் 37 வயதுடைய சித்திரவேல் வினைத்தீர்த்த உடையார். இவர் அபுதாபியில் எலக்ட்ரீசியனாக ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் 2015 ஆம் ஆண்டு தனது ஒரே மகள் 3 மாத குழந்தையாக இருக்கும் நிலையில் விடுமுறை முடிந்து அபுதாபிக்கு திரும்பி இருந்தார். தற்போது அவருடைய மகள் சுமார் 4 வயதை எட்டியுள்ளது என்றாலும் தனது தந்தைக்கு நேர்ந்த துயரத்தை அறியா பருவத்திலேயே இன்னும் மழலையாக.

சித்திரவேல் 2015 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெற்ற ஒரு வாகன விபத்தில் சிக்கி கோமா நிலையை அடைந்து இன்று வரை அதேநிலையிலேயே தொடர்கின்றார். இவரது வழக்கின் மீது தீர்ப்பு வழங்கப்பட்டும் இன்ஷூரன்ஸ் நிறுவனம் அவருக்கான நஷ்டஈட்டுத் தொகையை வழங்க முன்வாராதை தொடர்ந்து அவர் அபுதாபி மருத்துவமனையிலேயே தொடர்ந்தது சிகிச்சை பெற்று வந்தார் என்றாலும் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சித்திரவேலுவின் இளைய சகோதரர் ஒருவர் அவர் வேலைபார்த்து வந்த நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உடன் இருந்து கவனித்துக் கொண்டார்.

இந்நிலையில், நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து நஷ்டஈடாக 4.2 மில்லியன் திர்ஹம் கிடைத்ததை தொடர்ந்து அவர் கோமா நிலையிலேயே இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு உடனடியாக நாமக்கல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றாலும் மருத்துவர்கள் குணப்படுத்துவது கடினம் எனக்கூறி விட்டு தங்களால் இயன்ற சிகிச்சையை அளிக்க முன்வந்துள்ளனர்.

கிடைத்த நஷ்டஈட்டை கொண்டு சித்திரவேலுவின் மகளின் படிப்பிற்கும் அவரது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும் செலவழிக்கப்படும் என அவரது மற்றொரு சகோதரர் கணேசன் என்பவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் செயல்படும் (Sister Josephine Valarmathi of) Migrants Forum in India என்ற தொண்டு நிறுவனம் இவ்விவகாரத்தை மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்றதன் அடிப்படையில் இங்குள்ள இந்திய தூதரகம் சித்திரவேலுவிற்கு நஷ்டஈடு கிடைப்பதற்கும் ஊருக்கு கொண்டு செல்வதற்குமான உதவிகளை செய்தது என இந்திய தூதரகத்தின் சமூக விவகாரங்களுக்கான கவுன்சலர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.