.

Pages

Sunday, July 30, 2017

அதிரை அட்ஜயா பல் மருத்துவமனை இலவச பல் மருத்துவ முகாம் (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜூலை 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை இரண்டாமாண்டு துவக்க விழாவையொட்டி, இலவச பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை முகாம் அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமை, பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சி.வி சேகர் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். அட்ஜயா பல் மருத்துவமனை பல் மருத்துவர்கள் பா.பாரதி, ஜி.பிரியங்கா, ஆர். கார்த்திகா, ஏ.நிரஞ்சனா தேவி ஆகியோர் கலந்துகொண்டு பல் மருத்துவப் பரிசோதனை செய்தனர்.

முகாம் ஏற்பாட்டினை மகிழங்கோட்டை ஜி பாலசுப்பிரமணியன், பட்டுக்கோட்டை ஆதிராஜாராம் செய்தனர். இதில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இலவசமாக பல் சம்பந்தபட்ட பரிசோதனை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதில் 100 பேருக்கு அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனையில் மேற்கோள் சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்டனர்.

இம்முகாமில், சிறப்பு அழைப்பாளர்களாக அதிரை பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் ஏ.பிச்சை, காங்கிரஸ் கட்சி அதிரை பேரூர் தலைவர் எம்.எம்.எஸ் அப்துல் கரீம், அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலர் வீரகணேஷ. சேதுராமன், ரோட்டரி சங்க மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் கே. விவேகானந்தன், பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி தாளாளர் பாலசுப்பிரமணியன், அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், முஹம்மது நவாஸ்கான், அகமது மன்சூர் மற்றும் ஊர் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 
 

1 comment:

  1. அருமையான நிகழ்ச்சி வாழ்த்துக்கள். இந்த நிகழ்ச்சியின் துளிகள் திருமணச்சடங்குகளில் ஒன்று “பூ மணம் இடுதல்” . இதில் என்ன செய்வார்கள் என்றால், பூக்களைப் பாலில் தோய்த்து மணமக்களின் கை மற்றும் தோள்களில் இரு வீட்டாரும் வைப்பார்கள். இந்தச் சடங்கின் விளக்கம் என்னவென்றால், பூக்கள் எவ்வாறு மணம் பரப்புகிறதோ அதே போல் மணமக்களும் இந்த பூவுலகில் புகழ் மணம் பரப்ப வேண்டும் என்பதாகும்.  அதேப்போல இன்று அதிரையில் நடந்த அட்ஜயா இலவச மருத்துவ முகாமில் சிறப்பு அழைப்பாலர் வரிசையில் அதிராம்பட்டினம் மேலத்தெருவைச் சேர்ந்த திமிழ் மாநில காங்கிரஸ் கட்ச்சியின் அதிராம்பட்டினம் கிளை தலைவர்MMS கரீம் அவர்களின் அருமையான வாழ்த்துச்செய்தியில் ' அருமையான அப்பா, அருமையான மகன்' என்ற தலைப்பில் ரத்தினச் சுருக்கமாக பேசியது அனைத்து மக்களின் கவனத்தையும் ஈர்த்தது.             புலிக்குப் பிறந்தது பூனையாகுமா  அதேப்போல  அட்ஜயா பல் மருத்துவர் B,பாரதிBDS,CHE அவர்கள் அவரின் அப்பா வைப் போல மகுடம் சூட்ட வாழ்த்துக்கள் என்றார்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.