.

Pages

Tuesday, October 31, 2017

அமீரகத்தில் பாஸ்போர்ட் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்? (முழு விவரம்)

அதிரை நியூஸ்: அக். 31
குறிப்பு: அமீரகத்தில் சந்தர்ப்பவசத்தால் பாஸ்போர்ட்டை தொலைக்கும் அனைத்து நாட்டு பிரஜைகளுக்குமான பொதுவழிகாட்டல் இது. அந்தந்த நாட்டின் தூதரகத்திற்கு தேவையான ஆவணங்களைப் பற்றி சம்பந்தப்பட்ட தூதரகங்களை அணுகி விசாரித்துக் கொள்ளவும்.

பாஸ்போர்ட்டை தொலைக்கும் வெளிநாட்டு பிரஜைகள் உடனடியாக அருகிலிருக்கும் போலீஸ் நிலையத்தில் புகார் தர வேண்டும். போலீஸார் தரும் சான்று கடிதத்தை பெற்றுக் கொண்டவர்கள் அமீரக இமிக்கிரேசன் அலுவலகங்களில்  (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) அதை சமர்ப்பித்து அந்தக் கடிதங்களில் மேல் இமிக்கிரேசன் ஸ்டாம்பை பதிந்து உங்களுடைய விசா நிலையை தெரிவிக்கும் பிரதி சான்றிதழை தருவார்கள்.

இந்த சான்றிதழை பெற்றுக் கொண்டவர்கள் தங்களுடைய தூதரகங்களில் சமர்ப்பித்து மாற்றுப் பாஸ்போர்ட் வேண்டி விண்ணப்பிக்க வேண்டும். புதிய பாஸ்போர்ட்டை பெற்றுக் கொண்டவர்கள் மீண்டும் இமிக்கிரேசன் அலுவலகம் (GDRFA) சென்று உங்களுடைய விசா ஸ்டாம்பை அதில் ஏற்றிக் கொள்ள வேண்டும்.

தொலைந்த பாஸ்போர்ட்டுக்கு பதில் மாற்று பாஸ்போர்ட் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை:
புதிதாக எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2
காணாமல் போன பாஸ்போர்ட்டின் நகல் 1 (இருந்தால்)
சிறுவர்களுடைய பாஸ்போர்ட் காணாமல் போயிருந்தால் கண்டிப்பாக பெற்றோர்களில் ஒருவராவது வருகை தர வேண்டும்

கம்பெனி ஸ்பான்சர் விசாவின் கீழ் இருப்பவர்கள் கம்பெனி லெட்டர் பேடில் கம்பெனி முத்திரையுடன் பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்த லெட்டர், கம்பெனி டிரேட் லைசென்ஸ் காப்பி, எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டு காப்பி (Establishment Card) ஆகியவைகளை இணைக்க வேண்டும்

வெளிநாட்டினரின் (தனிநபர்) ஸ்பான்சர் விசாவின் கீழுள்ள உறவினர்களாக இருப்பின் ஸ்பான்சர் செய்தவருடைய கையொப்பமிட்ட லெட்டர் மற்றும் அவருடைய பாஸ்காப்பியை இணைக்க வேண்டும்.

வழிமுறை:
பாஸ்போர்ட் தொலைந்த பகுதியின் அருகாமையிலுள்ள போலீஸ் நிலையத்திற்கு முதலில் செல்ல வேண்டும். அங்குள்ள விண்ணப்ப பாரத்தை பூர்த்தி செய்து மேற்கூறப்பட்ட ஆவணங்களை அத்துடன் இணைத்து தர வேண்டும். பின்பு போலீஸ் தரும் ஆவணத்தை பெற்றுக் கொண்டு மேலும் 3 அரசு அலுவலகங்களில் ஒப்புதல் பெற வேண்டும்.

போலீஸ் தரும் ஆவணத்துடன் முதலில் துபை நீதிமன்ற வரவேற்பறைக்கு (Dubai Courts Reception) சென்று அதை தாருங்கள், அவர்கள் அந்த ஆவணத்தை தங்களது கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டு அந்த ஆவணத்தின் மீது தங்களுடைய முத்திரையை பதிந்து தருவார்கள், இதற்காக கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

அடுத்து, துபை நீதிமன்றத்தை அடுத்துள்ள பப்ளிக் பிராசிகியூசன் டிப்பார்ட்மெண்டிற்கும் (Public Prosecution Dept) சென்று மேற்கூறியவாறே ஆவணத்தை சமர்ப்பித்து அவர்களின் முத்திரையையும் கட்டணம் இன்றி பெற்றுக் கொள்ளுங்கள்.

மூன்றாவதாக, ஜெனரல் டைரக்டரேட் ஆப் ரெஸிடென்ஸி அன்ட் பாரீன் அபயர்ஸ் எனும் இமிக்கிரேசன் அலுவலகத்திற்கு  (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) சென்று 20 திர்ஹம் கட்டணம் செலுத்தி அங்கும் போலீஸ் அறிக்கையின் மீது அவர்களுடைய முத்திரையை பெற்றுக் கொள்ளுங்கள்.

3 இடங்களிலும் முத்திரையை பெற்றுக் கொண்ட ஆவணத்தை மீண்டும் அதே போலீஸ் நிலையத்தில் தாக்கல் செய்தால் அவர்கள் 'பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டது' என்று உறுதிசெய்த சான்றிதழை அரபியில் தருவார்கள்.

அந்த அரபி சான்றிதழை எடுத்துக் கொண்டு உங்களுடைய நாட்டு தூதரகத்தில் அவர்கள் சட்டப்படி கேட்கும் ஆவணங்களுடன் இணைத்து சமர்பிக்கவும். சில நாடுகளின் தூதரகங்கள் அவர்கள் நாட்டு மொழியில் அந்த போலீஸ் சான்றிதழை சட்டப்படி மொழிமாற்றம் செய்து தரக் கோருவார்கள்.

தூதரகம் உங்களுக்கு மாற்று புதிய பாஸ்போர்ட் வழங்கியவுடன் அதை மீண்டும் இமிக்கிரேசன் அலுவலகத்தில்  (General Directorate of Residency & Foreigners Affairs - GDRFA) சமர்ப்பித்தால் அவர்கள் பாஸ்போர்ட்டில் விசாவை பதிந்து தருவார்கள்.

தனிநபர்களால் ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ள உறவினர் மற்றும் துணைவர்களுக்கான வழிகாட்டல்:
தனிநபர்களால் விசா ஸ்பான்சர் செய்யப்பட்டவர்களின் பாஸ்போர்ட் காணாமல் போனது குறித்து புகார் செய்ய தனிநபர் ஸ்பான்சரின் பாஸ்போர்ட் காப்பி, பாஸ்போர்ட்டை தொலைத்தவரின் பாஸ்போர்ட் காப்பி மற்றும் போலீஸாரால் அரபியில் வழங்கப்பட்ட சான்றிதழ் ஆகியவற்றுடன் அதே பாஸ்போர்ட்டின் கீழ் வேறு யாருடைய பெயராவது இணைக்கப்பட்டிருந்தால் அவர்களுடைய பெயர் மற்றும் பாஸ்போர்ட் எண்ணையும் குறிக்க வேண்டும் (அப்படி யாராவது இருந்தால் மட்டும்)

சிறார்களுக்கான வழிகாட்டல்கள்:
சிறார்களுடைய பாஸ்போர்ட் தொலைந்திருந்தால் அவர்களுக்கு ஸ்பான்சர் செய்திருந்த தாய் அல்லது தந்தை கட்டாயம் நேரில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும். போலீஸார் அதனையொட்டி மேற்காணும் 3 இடங்களில் முத்திரை பெறுவதற்கான கடிதத்தை வழங்குவார்கள்.

சிறப்பு குறிப்புக்கள்:
ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளவர் ஒருவேளை செமி கவர்ன்மெண்ட் நிறுவனத்தில் (Semi Government Company) பணியாற்றினால் செல்லத்தக்க (Valid) எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டின் காப்பியையும்,

ஸ்பான்சர் செய்யப்பட்டுள்ளவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றினால் செல்லத்தக்க கமர்ஷியல் லைசென்ஸ் காப்பி மற்றும் செல்லத்தக்க எஸ்டாபிளிஷ்மெண்ட் கார்டின் காப்பிகளை இணைக்க வேண்டும்.

கட்டண விபரங்கள்:
தொலைந்து போன விசா விபரங்களை மீண்டும் புதிய பாஸ்போர்டில் பதிய ஈ-பார்ம் வழியாக 170 திர்ஹம் செலுத்த வேண்டும், எஞ்சிய ஒவ்வொரு ஆண்டுக்கும் கூடுதலாக தலா 100 திர்ஹம் செலுத்த வேண்டும்.

ஒருவேளை பாஸ்போர்ட் அமீரகத்திற்கு வெளியே தொலைந்து போயிருந்தால் ஸ்பான்சர் பழைய விசாவை ரத்து செய்து விட்டு புதிய விசா பெர்மிட்டுக்கு புதிய பாஸ்போர்ட் விபரங்களின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட்டை அமீரகத்திற்கு வெளியே தொலைத்தவர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட நாட்டின் தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொண்டு விசா பெர்மிட்டை பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும்.

Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (31.10.2017) தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழியினை அனைத்துத் துறை அலுவலர்களும் ஏற்றுக் கொண்டனர்.

“இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும் இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும் உளமார உறுதியளிக்கிறேன்.  சர்தார் வல்லபாய் பட்டேலின் தொலைநோக்குப் பார்வையாலும், நடவடிக்கைகளாலும் சாத்தியமாக்கப்பட்ட ஒன்றிணைந்த தேசத்தின் நல்லுணர்வினைப் பேண நான் இந்த உறுதிமொழியை ஏற்கிறேன். எனது நாட்டின் உள்பாதுகாப்பினை உறுதி செய்ய எனது பங்களிப்பினை நல்குவேன் என்றும் உளமாற உறுதி அளிக்கிறேன்.” இவ்வாறு உறுதிமொழியினை  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் வாசிக்க அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்த உறுதிமொழி, நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல்,  பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் செந்தாமரை (பொது), கணேசன் (கணக்கு), சித்ரா, (ஊரக வளர்ச்சி), ஜனனி சௌந்தர்யா (நிலம்), மாவட்ட கருவூல அலுவலர் நடராஜன்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சிங்காரம் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்திய விமானப்படை ஏர் மார்ஷல் தஞ்சை வருகை!

தஞ்சாவூரில் உள்ள விமானப் படை நிலையத்துக்கு இந்திய விமானப் படையின் தென்னகத் தலைமைத் தளவாய் ஆர்.கே.எஸ். பதாரியா திங்கள்கிழமை வந்தார்.

இவரை நிலையத் தளவாய் வி.கே. சிங் வரவேற்றார். இதையடுத்து, நிலைய கட்டளை அலுவலர்களுக்கான இரு நாள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து, பேசினார்.

பின்னர், நிலையத்தில் பல்வேறு பிரிவுகளையும், தயார் நிலையில் உள்ள இயக்கப் பிரிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள், நிலைய மேம்பாட்டுக்கான பணிகள் ஆகியவற்றை பாராட்டினார். மேலும், தொழில்முறை மற்றும் செயல்பாட்டுத் திறமை, பயிற்சி, முக்கிய முடிவு எடுத்தல் உள்ளிட்டவற்றில் உரிய பயன்பாடு இருப்பது அவசியம் என நிலைய அலுவலர்களிடம் பதாரியா விளக்கினார்.

அதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், அக். 31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று (அக்.30) திங்கட்கிழமை பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி காணப்படுகின்றன.

அதிராம்பட்டினத்தில் வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. மழை அவ்வப்போது விட்டுவிட்டு பெய்து வருகிறது.

இன்று (அக்.31) செவ்வாய்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 49.50 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்அதிகபட்சமாக கும்பகோணத்தில் 91 மி.மீ, பட்டுக்கோட்டையில் 47.40 மி.மீ, பேராவூரணியில் 14 மி.மீ, மதுக்கூரில் 55.80 மி.மீ மழை பதிவாகியது.

மழையையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இன்று (அக்.31) செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
* File Image

மதுக்கூர் மைதீன் படுகொலை ~ மர்ம நபர்களின் வெறிச்செயல்

மதுக்கூர், அக்.31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரைச்
சேர்ந்தவர் மைதீன் (வயது 37). இஸ்லாமிய ஜனநாயக முன்னணி ( IJM ) என்ற அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தார். இந்நிலையில், மதுக்கூர் சிவக்கொல்லை பகுதியில் உள்ள இரு சக்கர பழுதுபார்ப்பு நிலையத்தில் திங்கள்கிழமை இரவு அமர்ந்து தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, இவரை ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் 5 பேர் அரிவாளால் வெட்டிவிட்டு, அதே ஆட்டோவில் தப்பிச் சென்றனர். இதில், பலத்தக் காயமடைந்த மைதீன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

Monday, October 30, 2017

அமீரகத்தில் நவம்பர் மாத பெட்ரோல் விலை நிலவரம் !

அதிரை நியூஸ்: அக்,30
அமீரகத்தின் சில்லறை பெட்ரோல் விலை ஒவ்வொரு மாதமும் சர்வதேச விலை நிலவரத்திற்கேற்ப மாற்றி அமைக்கப்படுகிறது. தற்போது ஒபெக் (OPEC) எனும் பெட்ரோல் உற்பத்தி நாடுகள் பெட்ரோல் விலை சரிவை மட்டுப்படுத்துவதற்காக பெட்ரோல் உற்பத்தியையும் அதன் ஏற்றுமதியையும் குறைத்துக் கொண்டுள்ளன.

கடந்த 2 ஆண்டுகளில் முதன்முதலாக அமெரிக்க பெட்ரோல் விற்பனை 60 டாலருக்கு மேல் உயர்ந்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ள ஒபெக் நாடுகள் தங்களின் பெட்ரோல் உற்பத்தி குறைப்பு ஒப்பந்தத்தை எதிர்வரும் 2018 மே மாதம் வரை நீட்டித்துக் கொண்டுள்ளன. இதில் அமீரகம் தனது மொத்த ஏற்றுமதியில் 10 சதவிகிதத்தை குறைத்துக் கொண்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதத்திற்கான பெட்ரோல் சில்லறை விற்பனை விலையை அமீரக எரிசக்தி அமைச்சகம் (The Ministry of Energy) வெளியிட்டுள்ளது அதன்படி பெட்ரோல் கடந்த மாத விலையை விட லிட்டருக்கு 9 காசுகள் குறைந்தும், டீசல் லிட்டருக்கு 1 காசு உயர்ந்தும் காணப்படுகின்றது. (அடைப்புக் குறிக்குள் காணப்படுவது அக்டோபர் மாத விலை ஒப்பீட்டுக்காக)

சூப்பர் 98 - 2.03 திர்ஹம் (2.12)
சூப்பர் 95 - 1.92 திர்ஹம் (2.01)
ஈ பிளஸ் - 1.85 திர்ஹம் (1.94)
டீசல் - 2.11 திர்ஹம் (2.10)

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

அதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவு !

அதிராம்பட்டினம், அக். 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், இன்று (அக்.30) திங்கட்கிழமை பிற்பகல் முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அதிரையின் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி காணப்படுகின்றன. வானம் மேகக்கூட்டங்களால் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. குளிர்ந்த காற்றுடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இன்று (அக்.30) திங்கட்கிழமை மாலை 4 மணி நேர நிலவரப்படி அதிராம்பட்டினத்தில் 6.40 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில்
அதிகபட்சமாக லோவர் அணைக்கட் 57.40 மி.மீ, பட்டுக்கோட்டையில் 2.40 மி.மீ, பேராவூரணியில் 1 மி.மீ, மதுக்கூரில் 2.60 மி.மீ மழை பதிவாகியது.
* File Image

தஞ்சை பஸ் விபத்து ~ ஆட்சியர் ஆறுதல் (படங்கள்)

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அம்மாப்பேட்டை ஒன்றியம், பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (30.10.2017) நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

இன்று மதியம் 12.30 மணியளவில் அம்மாப்பேட்டை ஒன்றியம், பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் திருவாரூரிலிந்து தஞ்சையை நோக்கி வந்த தனியார் ஈஸ்வரி பேருந்தும், தஞ்சாவூரிலிருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்தும் (சி.ஆர்.சி) நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இரண்டு ஆண்கள், 2 பெண்கள் உயிரிழந்தனர்.  மேலும் 47 பேர் காயமடைந்து  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  ஆகியோர் நேரில் பார்வையிட்டு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயக்குமாரிடம் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தேவைப்படும் நபர்களுக்கு எக்ஸ்ரே எடுக்கவும், இரத்தம் தேவைப்படுவோருக்கு உரிய ரத்தம் வழங்கிடவும் மருத்துவர்களை அறிவுறுத்தினார். காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு பூரண நலம் பெற வேண்டும் என ஆறுதல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை கூறினார்.

பின்னர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மருத்துவரிடம் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.

முன்னதாக அம்மாப்பேட்டை பல்லவராயன்பேட்டை புத்தூர் கிராமத்தில் விபத்து ஏற்பட்ட இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர்  நேரில் பார்வையிட்டார்.

2 வயது குழந்தையை காப்பாற்ற சிறுத்தையுடன் போராடி ஜெயித்த இளம்பெண் !

அதிரை நியூஸ்: அக்.30
2 வயது குழந்தையை காப்பாற்றுவதற்காக சிறுத்தையுடன் போராடி ஜெயித்துள்ளார் இளம்பெண்.

மத்திய பிரதேச மாநிலம் மொரீனொ மாவட்டத்தின் பைசாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆஷா என்ற 25 வயது இளம்பெண். இவர் தனது 2 வயது பெண் குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பால்பூர் - குனோ வன உயிரின சரணாலயம் அமைந்துள்ள பகுதியில் இருந்து சுமார் 150 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள கிராமத்திற்கு பள்ளத்தாக்குகளும், புதர்களும் நிறைந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

இந்நிலையில் சம்பவத்தன்று இப்பெண்ணின் 2 வயது குழந்தையை கொல்லும் நோக்கத்துடன் பாய்ந்து தாக்கிய சிறுத்தை (Leopard) ஒன்றை தனது கைகளால் தொடர்ந்து தாக்கி சுமார் 20 நிமிடங்கள் போராடினார். இடையில் இவரது அலறல் சத்தம் கேட்டு அருகிலுள்ள கிராமத்தினர் உதவிக்கு வந்ததை தொடர்ந்து சிறுத்தை தப்பி ஓடியது.

தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள், இப்பகுதியில் மனிதர்களை சிறுத்தை தாக்கும் சம்பவம் இதுவே முதன்முறை என்பதால் தீர விசாரித்த பின்பே சம்பவத்தை உறுதி செய்ய முடியும் எனக்கூறியதுடன் தற்காலிகமாக சில வன காவலர்களை அக்கிராமத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தியுள்ளனர்.

வரலாற்றில் RED-TAPISM 

(Red-tapism என்றால் என்ன? 
Behaviour, practices, or attitudes associated with an excessive adherence to official rules and formalities; red tape.)

இந்தியாவில் புகழ்பெற்ற ஆங்கிலேய வேட்டைக்காரர் ஜிம் கார்பெட் அவர்களை பற்றி படித்திருப்பீர்கள், இவருடைய நினைவாகத் தான் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள இந்தியாவின் பழமையான புலிகள் சரணாலயம் 'ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்' என்று அழைக்கப்படுவதையும் அறிவீர்கள்.

இவருடைய காலத்திலும் புலி ஒன்று காடுகள் வழியாக சென்று கொண்டிருந்த 2 கிராமத்து நண்பர்களில் ஒருவரை தாக்க மற்றவர் தீரமுடன் புலியுடன் போராடி தனது குடல் சரிந்து குற்றுயிரான நண்பரை காப்பாற்றிக் தோளில் தூக்கி கொண்டு வந்தார். தாக்கிய புலியும் இவர் தனது கிராமத்திற்குள் நுழையும் வரை பின் தொடர்ந்து வந்தது.

இந்த வீரதீரச் செயலுக்காக அந்த கிராமத்து நண்பருக்கு ஆங்கிலேயே அரசிடம் அங்கீகாரம் பெற்றுத் தர போராடினார் ஆனாலும் நேரில் பார்த்த சாட்சிகள் இல்லை (Red-Tape) எனக்கூறிய ஆங்கிலேயே அரசு மறுத்ததை வருத்தத்துடன் பதிவு செய்து சென்றுள்ளார் ஜிம் கார்பெட்.

எனவே, வெள்ளையன் ஆண்டாலும் கொள்ளையன் ஆண்டாலும் பாமர இந்தியர்களின் வீரதீரச் செயல்கள் மறுக்கப்படுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

சவுதிக்கான இந்தியத் தூதர் திரும்ப அழைப்பு !

அதிரை நியூஸ்: அக்.30
சவுதிக்கான இந்தியத் தூதரை திடீரென திரும்பப் பெற்றுள்ளது இந்திய அரசு.

2016 ஆம் ஆண்டு முதல் சவுதிக்கான இந்திய தூதராக பணியாற்றி வருபவர் நூர் ரஹ்மான் ஷேக், இந்தியர்களின் மனங்களை குறிப்பாக தொழிலாளர்களின் தோழனாக வலம் வந்த நூர் ரஹ்மான் ஷேக்கை இந்திய அரசு திடீரென திரும்ப அழைத்துள்ளதால் மதம், இனங்களை கடந்து அனைத்து சவுதி வாழ் இந்தியர்கள் மத்தியிலும் கடும் அதிருப்தியை எழுப்பியுள்ளது.

பார்ப்பதற்கு எளிமையாகவும், பழகுவதற்கு தோழமையாகவும் திகழ்ந்த நூர் ரஹ்மான் ஷேக் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு அந்தந்த மட்டங்களில் தீர்வுகளை தேடித்தந்தவர், சமூக வலைத்தளங்களின் வழியாக பெறும் புகார்கள் மீதும் உடனடி நடவடிக்கைகளை எடுத்தவர். இந்திய அரசின் திட்டங்களான சுவச் பாரத் (கிளீன் இந்தியா), பர்யதன் பர்வ் (ஒருங்கிணைந்த இந்திய சுற்றுலா) போன்றவற்றை இந்தியர்கள் மத்தியில் விளக்கி கொண்டு சேர்த்தவர்.

'70 ஆண்டு கால இந்திய சுதந்திரம்' என்ற பெயரில் சவுதியில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததும், கடந்த வாரம் சவுதியில் கேரள மாநிலம் சார்பாக நடைபெற்ற கலாச்சார திருவிழாவில் இவர் கலந்து கொண்டதை தொடர்ந்து மக்கள் பெருமளவில் கலந்து கொண்டது போன்ற மத்திய அரசின் கண்ணை உறுத்திய நிகழ்வுகளே இவரது உடனடி மாற்றத்திற்கு காரணமாக இருக்கலாம் என சவுதிவாழ் இந்தியர்கள் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

மேட்டுக்குடிகள் முதல் குறைந்த சம்பள தொழிலாளர்கள் வரை மிக சகஜமாக, சமமாக பேசிப் பழகும் தன்மையுடைய நூர் ரஹ்மான் ஷேக் அவர்கள் பின்தங்கிய வடகிழக்கு மாநிலமான மணிப்பூரின் ஒரு கிராமத்திலிருந்து வந்த இவர் 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டின் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வெற்றிகரமாக தேறி 2003 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத் துறையில் பணியாற்றி வருகிறார்.

ஆரம்பத்தில் ஜித்தாவில் இந்திய ஹஜ் மிஷனில் கவுன்சலராக பணியாற்றிவர் பின்பு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியாக சிறிது காலம் நியமிக்கப்பட்டவர் மீண்டும் 2016 ஆம் ஆண்டு ஜித்தாவிற்கு கவுன்சலர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுத் திரும்பியர் தனது பதவிகாலம் முழுமையடையும் முன்பே இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்டுள்ளார்.

குறிப்பாக, கடந்த ஹஜ் காலத்தின் போது இந்திய அரசின் சார்பாக இந்திய ஹஜ் யாத்ரீகர்களுக்கான தேவைகளை நிறைவேற்றித் தருவதில் மிகச்சிறப்பாக செயல்பட்டதற்காக இந்தியர்களின் மனங்களையும் வென்றிருந்தார்.

Source: Saudi Gazette / Msn
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள்

அதிரை நியூஸ்: அக்.30
அதிராம்பட்டினம், சி.எம்.பி லேனை சேர்ந்த மர்ஹூம் வ.மீ வரிசை முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எம். அப்துல் ஹையூம் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், அமானுல்லா, மீரா சாஹிப், அப்துல் ரஹ்மான் ஆகியோரின் தாயாரும், முகமது சேக்காதி,  அப்துல் கலாம்,  ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஹாஜரா அம்மாள் அவர்கள் இன்று பகல் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (31-10-2017) காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

ஆஸ்திரேலியாவில் அதிரை சகோதரி வஃபாத் (மரணம்)

அதிரை நியூஸ்: அக். 30
அதிராம்பட்டினம், புதுமனைத்தெருவை சேர்ந்த  மர்ஹூம் சேக்கா மரைக்காயர் அவர்களின் மகளும், எம்.எஸ் அகமது கபீர் அவர்களின் மனைவியும், அபூபக்கர் அவர்களின் சகோதரியும், எம்.ஓ முகமது சாலிம், கே. இர்பானுதீன் ஆகியோரின் மாமியாரும், ஏ.கே ரிஜ்வி முகைதீன் அவர்களின் தாயாருமாகிய  பாத்திமா அவர்கள் ஆஸ்திரேலியா நாட்டில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

அதிராம்பட்டினத்தில் பகலில் எரியும் மின் விளக்குகள் (படங்கள்)

அதிராம்பட்டினம், அக்.30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை மின்கம்பங்களில் காணப்படும் மின் விளக்குகள் பகலில் எரிந்து மின்சாரம் வீணடிக்கப்படுவது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 தினங்களாக இப்பகுதி மின் விளக்குகள் பகலில் எரிவதும், இரவில் எரியாமல் இருளாக காட்சி அளிப்பதாக புகார் கூறினார். மின்சார விநியோக போர்டில் ஏற்பட்டுள்ள பழுதை, அதிராம்பட்டினம் பேரூர் நிர்வாகம் உடனடியாக சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் (மாணவச் செய்தியாளர்)
 
 

Sunday, October 29, 2017

மரண அறிவிப்பு ~ பைசல் அகமது (வயது 24)

அதிரை நியூஸ்: அக். 29
அதிராம்பட்டினம், காலியார் தெருவை சேர்ந்த மர்ஹூம் மிஷ்கின் அவர்களின் பேரனும், சேக் அலாவுதீன் அவர்களின் மகனும், அப்துல் ரெஜாக், ஹைருல்லாஹ் ஆகியோரின் மைத்துனரும், முகமது ராஜிக், ரியாஸ் ஆகியோரின் சகோதரருமாகிய பைசல் அகமது (வயது 24) அவர்கள் இன்று இரவு பிலால் நகர் இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை ( 30-10-2017 ) காலை 10 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

இருதய நோயாளி சிகிச்சைக்கு உதவ கோரிக்கை !

அதிராம்பட்டினம், அக். 29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், திலகர் தெருவை சேர்ந்தவர் எஸ்.எம் உஸ்மான் (49). சென்னையில் தனியார் நிறுவனத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், கடந்த 1 மாதத்திற்கு முன்பாக திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் அறிவுரையின் பேரில், ஆஞ்சியோகிராம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், இருதயத்தில் ஒரு இடத்தில் 90 சதவீத அடைப்பு உள்ளதாகவும், ஆஞ்சியோபிளாஸ்ட் சிகிச்சை மற்றும் ஸ்டென்ட் வைத்து இவற்றை சரிசெய்துவிடலாம் என மருத்துவர் கூறியதாக தெரிவித்தார். இதற்கான செலவுத் தொகை ரூ.1.85 லட்சம் ஆகும் எனவும், காப்பீட்டுத் திட்டம் மூலம் ரூ. 60 ஆயிரம் வரை பெறலாம் என தெரிவித்தார். ஏழ்மை நிலையில் இருக்கும் தன்னால் மீதமுள்ள ரூ.1.25 லட்சம் பணத்தை திரட்ட முடியவில்லை எனக் கூறி  நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.

இவருக்கு உதவ எண்ணுகின்றவர்கள், நேரடியாக உஸ்மான் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினம் நிதி சார்ந்த சேவை அமைப்பாகிய அதிரை பைத்துல்மால் மூலமாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கத்தின் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.

எஸ்.எம் உஸ்மான் அவர்களுக்கு சொந்தமான வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : S M USMAN
Bank Name : STATE BANK OF INDIA
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 31389479680
IFSC: SBIN0014370



மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு: 0091 9789535498

அதிரையில் மனிதநேய ஜனநாயக கட்சி புதிய அலுவலகம் திறப்பு ~ கொடியேற்றும் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், அக். 29
மனிதநேய ஜனநாயக கட்சி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேரூர்  கிளை புதிய அலுவலகம் திறப்பு மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அதிராம்பட்டினம் செயலாளர் எம்.ஐ முகமது செல்லராஜா தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ் ஹாரூன் ரஷிது கலந்துகொண்டு, கிளை அலுவலகத்தை திறந்து வைத்தார். முன்னதாக, அதிராம்பட்டினம், தக்வா பள்ளிவாசல் அருகே அமைந்துள்ள கட்சி கொடிக்கம்பத்தில் கொடியேற்றி வைத்தார். மேலும், மனிதநேய கலாச்சாரப் பேரவை குவைத் மண்டல துணைச் செயலாளர் அதிரை ஏ.எச் பைசல் அகமது திருமணத்தை நடத்தி வைத்து, வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் கே. ராவூத்தர்ஷா, மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாவட்ட செயலாளர் அகமது கபீர், துணைச்செயலாளர் முகைதீன், அதிரை பேரூர் பொருளாளர் எச். சாகுல் ஹமீது, சமீர் அகமது, இப்ராஹீம் மஸ்தான், அபுபைதா மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
 

சவுதியில் இருந்து 17 ஆண்டுகளுக்குப் பின் நாடு திரும்பிய பணிப்பெண் !

அதிரை நியூஸ்: அக். 29
17 ஆண்டுகளுக்குப் பின் சவுதியிலிருந்து மீட்கப்பட்ட பணிப்பெண் நாடு திரும்பினார்.

இலங்கையிலிருந்து 2000 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு குசுமாவதி என்ற சிங்களப் பெண் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். சென்றவருக்கு ஆள் அரவமற்ற பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணி வழங்கப்பட அதையே தொடர்ந்து 15 ஆண்டுகளாக செய்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை உறவினர்களிடமிருந்து முற்றிலுமாக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார், காரணம் தெரியவில்லை.

இந்நிலையில் இலங்கை உறவினர்கள் அவர்களின் அரசுக்கு கண்டுபிடித்து மீட்டுத்தரும்படி கோரிக்கை எழுப்ப, இலங்கை தூதரகம் சவுதி அதிகாரிகளின் துணையுடன் அப்பெண்ணை அவரது முதலாளியிடமிருந்து மீட்டு நாட்டுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பள நிலுவையாக 3.6 மில்லியன் இலங்கை ரூபாய்களும் கிடைத்தது.

ஒருபுறம் ஆடு, ஓட்டகங்கள் மேய்ப்பதற்காக ஒரு பெண்ணை 17 வருடங்கள் நாட்டுக்கு அனுப்பாத முதலாளியின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற பலத்த கோரிக்கைகள் எழும்பி வரும் நிலையில், அந்தப் பெண் விருப்பப்பட்டுத் தான் 15 ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவர் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு செல்வதற்கு முன் ஒருபோதும் தான் இலங்கைக்கு திரும்புவது குறித்து உறவினர்களிடம் புகார் சொன்னதே இல்லை என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர். இருபுறம் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தது ஊர்ஜிதமானால் கண்டிப்பாக சவுதி முதலாளி தண்டிக்கப்பட வேண்டும் என சொல்வோரும் உண்டு.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

4 வயது பெண் குழந்தைக்காக வீடுதேடிச் சென்ற துபை போலீஸ் (வீடியோ)

அதிரை நியூஸ்: அக். 29
சமூக வலைத்தளங்களில் நாள்தோறும் தமிழக வீதியெங்கும் பெருகிவிட்ட யூனிபார்ம் போட்ட பிச்சைக்காரர் பற்றிய செய்திகளையே படித்து விரக்தியின் விளிம்பை நோக்கி சென்று கொண்டிருக்கும் நமக்கு ஒரு மாற்றான் தோட்டத்து மல்லிகை வாசம் பற்றிய ஆறுதல் செய்தி இது.

ஒரு சிறுவனு,ம் அவனுடைய தங்கையும் விளையாடிக் கொண்டிருக்கையில் விளையாட்டாக சிறுவன் தன் தங்கையிடம், உன்னை போலீஸ் பிடித்துக் கொண்டு போகக்போகிறார்கள் என பயமுறுத்த, நிஜமாக போலீஸ் பிடித்துக் கொண்டு போய்விடுமோ என பயந்த சிறுமி ஹனான் நள்ளிரவில் கூட தூக்கம் வராமல் கடந்த ஒரு வாரமாக அழுது புலம்பியிருக்கிறாள், செய்தி துபை போலீஸாருக்கு சொல்லப்பட்டது.

சிறுமி பயந்தது போலவே தன்னுடைய வீட்டிற்கு போலீஸ் வந்ததை கண்டு இன்னும் அரண்டுபோக, சிறுமியை தேற்றிய போலீஸார் தாங்கள் கெட்டவர்களை மட்டுமே பிடிப்போம் உன்னைப் போன்ற நல்லப்பிள்ளைகளை அல்ல என்று கூறியதுடன் தங்களுடைய விலையுயர்ந்த போலீஸ் வாகனத்திலேயே சிறுமி ஹனானை ஏற்றி ஊரைச்சுற்றி வந்ததுடன் கைநிறைய பரிசுகளையும் வழங்க சிறுமி ஹனானுக்கு தற்போது போலீஸ் என்ற பயமே அகராதியிலிருந்து அழிந்து போனது.

துபை போலீஸார், எங்களுடைய பணி கைது செய்வதும் போக்குவரத்து அபராதங்கள் விதிப்பது மட்டுமல்ல மனிதநேயமும் தான் என்று தங்களுடைய காலரை பெருமையுடன் தூக்கிவிட்டு கொள்கிறார்கள். துபை போலீஸ் வெளியிட்ட அந்த வீடியோவைத் தான் பாருங்களேன்!

https://www.facebook.com/dubaipolicehq.en/videos/1506265049451025/

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

குவைத்தில் கடுமையாக்கப்படும் போக்குவரத்து விதிமீறல் சட்டங்கள் !

அதிரை நியூஸ்: அக். 29
குவைத்தில் கடுமையான போக்குவரத்து சட்டங்கள் குறித்து உள்துறை அமைச்சகம் உறுதி செய்தது.

குவைத்தில் போக்குவரத்தை நெறிப்படுத்தும் நோக்குடன் பல்வேறு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளதாக அல் ஜெரீதா பத்திரிக்கையில் வெளியான செய்தியை குவைத் உள்துறை அமைச்சர் ஷேக் காலித் அல் ஜர்ராஹ் உறுதி செய்தார்.

சட்டம் எண் 169இன் படி, பாதசாரிகள் சாலையை கடக்கும் ஜிப்ரா கிராஸிங், பொதுமக்கள் பயன்படுத்தும் சாலையோரங்கள், போக்குவரத்திற்கு தடையாக மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக வாகனத்தை நிறுத்தினால் 2 மாதம் வாகனத்தை பிடித்து வைக்கப்படும். மேலும் வாகனத்தை எடுத்துச் செல்லும் ரெக்கவரி வாடகை 10 குவைத் தினாருடன் நாளொன்றுக்கு 1 குவைத் தினார் என அபராதமும் வசூலிக்கப்படும்.

சட்டம் எண் 209இன் படி, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய அனுமதியளிக்கின்றது. சட்டம் எண்கள் 208 மற்றும் 210இன் படி, தடுத்து வைப்பதற்காக பறிமுதல் செய்து எடுத்துச் செல்லப்படும் வாகனத்தில் சேதங்கள் ஏற்பட்டால் போக்குவரத்து துறை பொறுப்பேற்காது.

அதேபோல் வாகனம் ஓட்டும் போது மொபைல் போனில் பேசினால், சீட் பெல்ட் அணியாமல் சென்றாலும் 2 மாதம் வாகனம் முடக்கப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும் என ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Msn / Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மரண அறிவிப்பு ~ டி.எம் முகமது உசேன் அவர்கள்

அதிரை நியூஸ்: அக். 29
அதிராம்பட்டினம், பெரிய தைக்கால் பகுதியை சேர்ந்த மர்ஹூம் திதார்சா அவர்களின் மகனும், ஏ.முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மக்கா பள்ளி மர்ஹூம் முகமது கனி, மர்ஹூம் ஓ.பி.எம் முகைதீன் பிச்சை, ஓ.பி.எம் பக்கீர் முகமது  ஆகியோரின் சிறிய தகப்பனாரும், எம். முகமது ரபீக், எம். கமாலுதீன் ஆகியோரின் பெரிய தகப்பனாருமாகிய டி.எம் முகமது உசேன் அவர்கள் வஃப்பாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று ( 29-10-2017 ) காலை 11.30 மணியளவில் பெரிய தைக்கால் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.

Saturday, October 28, 2017

குஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினப்படிமம் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: அக். 28
குஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்புற பாலைவனப் பகுதி 'இந்திய துணைக்கண்டத்தின் ஜூராசிக் பார்க்' என அழைக்கப்படுகிறது.

இங்கு இந்திய மற்றும் ஜெர்மானிய விஞ்ஞானிகள் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் வழியாக சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய ஊர்ந்து செல்லும் தன்மையுடைய வரலாற்று காலத்திற்கு முந்தைய மீனின் (Fossil of Fish Lizard) படிமம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

சுமார் 5;.5 மீட்டர் (18 அடி) நீளமுள்ள இந்தப் படிமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கண்டபிடிக்கப்பட்டாலும் அந்தப்படிமம் குறித்து மேலும் பல உண்மைகளை அறிந்து கொள்வதற்காகவும், முழுமையாக படிமத்தை மீட்டெடுப்பதற்காகவும் ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலம் எடுத்துக் கொண்டனர்.

மெஸோசோயிக் காலம் எனப்படும் டைனோசர்கள் பூமியில் உலாவிய 250 வருடங்களுக்கு முற்பட்ட இந்த பல்லி வடிவ மீனுக்கு The ichthyosaur என்ற பெயரை சூட்டியுள்ளனர், (Mesozoic Era upwards of 250 million years ago when dinosaurs roamed the earth)

இந்த மீன் தற்போது வாழும் டால்பின் மீன் இனத்தை போன்றது. இதுபோன்றதொரு உயிரினம் இந்தியாவில் தற்போது தான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்படுகிறது என்றாலும் இதைப்போன்ற படிமங்கள் ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் கிடைத்துள்ளன.

இந்தியாவின் குஜராத்தில் தான் பல புதிய வகை டைனோசர் படிமங்கள் அதிகளவில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன, குறிப்பாக நர்மதா ஆற்று வெளியில். 2003 ஆம் ஆண்டு நேஷனல் ஜியாக்ரபி குழுவினர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட சுமார் 30 நீளமுள்ள இந்த டைனோசருக்கு நர்மதை ஆற்றை குறிக்கும் வகைளில் "Rajasaurus Narmadensis" என பெயரிட்டனர்.

மேலும் கட்ச் பகுதியிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அகமதாபாத் நகருக்கு தென்புறத்தில் அமைந்துள்ள பாலாசினொர் (Balasinor) எனுமிடத்தில் டைனோசர்கள் முட்டையிட்டு அடைகாக்கும் இடம் (A large dinosaur egg hatchery) கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247 / AFP
தமிழில்: நம்ம ஊரான்

அதிரையில் TNTJ சார்பில் தொழுகை குறித்து சிறப்பு பயிற்சி !

அதிராம்பட்டினம், அக்.28
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டினம் கிளை-1 சார்பில், நபி வழி தொழுகை குறித்து சிறப்பு பயிற்சி முகாம், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலையில் அமைந்துள்ள தவ்ஹீத் பள்ளியில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

முகாமிற்கு, கிளைத் தலைவர் நவாப்ஷா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக அவ்வமைப்பின் மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் அஸ்ரப்தீன் பிர்தெளசி கலந்துகொண்டு தொழுகை குறித்து பயிற்சி அளித்தார். இதில் கிளைச் செயலாளர் ஹைதர் அலி, பொருளாளர் அல்லா பிச்சை உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள்.
 
 

குவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ கட்டணங்கள் அதிகரிப்பு !

அதிரை நியூஸ்: அக். 28
குவைத்தில் வெளிநாட்டினருக்கான மருத்துவ செலவினk கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் வாழும் வெளிநாட்டினர் மீதான மருத்துவ கட்டணங்களை குவைத் சுகாதாரத்துறை ஏற்றியதுடன் நடப்பு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வரும் எனவும் அறிவித்திருந்ததை எதிர்த்து வழக்கறிஞர் ஒருவர் குவைத் சுப்ரீம் கோர்ட்டில் வழக்காடியதை தொடர்ந்து இந்த விலையேற்றம் அக்டோபர் 4 ஆம் தேதிக்கும் பின்பு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்காக அக்டோபர் 25 ஆம் தேதிக்கும் தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குவைத் சுகாதாரத் துறையின் வாதத்தை ஏற்று வழக்கறிஞரின் மனுவை தள்ளுபடி செய்ததுடன் மருத்துவ கட்டணங்களின் விலையேற்றம் செல்லும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

வீழ்ச்சியடைந்துள்ள கச்சா எண்ணெய் விலை ஒருபுறம், மற்றொரு புறம் வெளிநாட்டினர் தங்களின் உறவினர்களை குவைத்தில் சிகிச்சை எடுப்பதற்காகவே அழைத்து வருவதன் வழியாக குறைந்த கட்டணம் அல்லது இலவசமாக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் குவைத்தியர்களின் பொருளாதாரம் சுரண்டப்படுவதாக ஒரு சில எம்.பிக்கள் குரல் எழுப்பியிருந்தனர்.

இன்னும் சில எம்.பிக்கள் குறைந்த வருவாய் பெறும் ஊழியர்களின் நலனுக்காக மருத்துவ கட்டணங்களை ஏற்றுவதை சில மாதங்களுக்காவது தள்ளிப்போட வேண்டும் எனவும் ஆதரவு குரல் எழுப்பியிருந்ததுடன் மருத்துவ இன்ஷூரன்ஸ் திட்டத்தில் போதிய மாற்றங்களை மேற்கொண்டு வெளிநாட்டினரும் பயன்பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுப்பியிருந்தனர்.

விசா ரினீவலின் போது ஸ்பான்சர்களே இன்ஷூரன்ஸூக்கான கட்டணங்களை செலுத்த வேண்டும் என வலீத் அல் தப்தபை கேட்டுக் கொண்டுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

அமீரகத்தில் 'சிவப்பழகு' கிரீம்களுக்கு எதிராக அரசு எச்சரிக்கை!

அதிரை நியூஸ்: அக்.28
பெண்களின் இயற்கை முக, அக அழகுகளுக்கு நிகர் ஏதுமில்லை எனினும் பல பெண்கள் 'சிவப்பழகு' கிரீம்கள் என விற்கப்படும் முகக்கிரீம்களை பூசுவதில் அதீத மோகம் கொள்வர். பெண்களின் இந்த விருப்பத்தை பயன்படுத்தி சந்தைப்படுத்தும் அழகு சாதன நிறுவனங்கள் ஏராளம், ஏராளம்.

அமீரக சுகாதாரம் மற்றும் முன் தடுப்பு அமைச்சகம் (The Ministry of Health and Prevention) பெண்களின் அழகு சாதனங்களை குறிப்பாக முகப்பூச்சு கிரீம்களை மருத்துவர்களின் ஆலோசணையின்றி பயன்படுத்த வேண்டாம் என்றும் குறிப்பாக சோஷியல் மீடியாக்கள் வழியாக விளம்பரம் செய்து விற்கப்படும் கிரீம்களின் பக்கம் நெருங்கவே வேண்டாம் என எச்சரித்துள்ளது. போலியான கிரீம்களை உபயோகிப்பதன் மூலம் தோல் நிரந்தர சேதமடையும், கரும்புள்ளிகள் ஏற்படும் மற்றும் முகத்தில் வெளிர்தன்மை ஏற்படும் என எச்சரித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் (படங்கள்)

பேராவூரணி அக்.28
தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் பேராவூரணி அரசு மருத்துவமனை மற்றும் பேராவூரணி டாக்டர் ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக் பள்ளி இணைந்து பள்ளி விழா அரங்கில், மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கை சனிக்கிழமை அன்று நடத்தினர்.

நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும், மெட்ரிக் பள்ளிகள் சங்க மாநில துணை பொதுச்செயலாளருமான டாக்டர் ஜி.ஆர்.ஶ்ரீதர் தலைமை வகித்து உரையாற்றினார். பள்ளி முதல்வர் சுரேஷ் வரவேற்றார்.

இதில், தொற்றாநோய் பிரிவு மாவட்ட மருத்துவ அலுவலர் டாக்டர் எம்.எட்வின் கலந்து கொண்டு பேசுகையில், 
"30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தவறாமல் அரசு மருத்துவமனைகளிலோ, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ சென்று மார்பக பரிசோதனையை இலவசமாக செய்து கொள்ளவேண்டும். நோய் வருமுன் கண்டறிந்து தங்களை தற்காத்துக் கொள்ளும் விழிப்புணர்வை  மாணவிகள் தங்கள் குடும்பத்தார், அக்கம்பக்கத்தினருக்கு ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

நிகழ்ச்சியில் செவிலியர்கள் சத்யா, ரேவதி ஆகியோர் மாணவிகளுக்கு மார்பக புற்றுநோய் குறித்து கருத்தரங்கில் விளக்கமளித்தனர். பள்ளி ஆசிரியைகள் மனோசித்ரா, ரமாதேவி, சத்யா, மேனகா, ரமணா, கவிதா, சுதா, வினோதா, ஶ்ரீபிரியா மற்றும் மேல்நிலைப்பிரிவு மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 

தஞ்சையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் (படங்கள்)

தஞ்சாவூர், அக். 28
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதை உறுதிபடுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஆர்ப்பாட்டம் தஞ்சை தலைமை அஞ்சலகம் முன்பாக சனிக்கிழமை காலை நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலர் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்,  காங்கிரஸ் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் கிருஷ்ண சாமி வாண்டையார், திமுக மாவட்ட துணைச் செயலர் கா. அண்ணாதுரை, திமுக மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணை அமைப்பாளர் எஸ்.எச் அஸ்லம், தஞ்சை மாநகர செயலர் நீலமேகம் உள்ளிட்ட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.