அதிராம்பட்டினம், அக்.24
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் எம். அப்துல் அஜீஸ். இவரது மகன் முஜாஹிதீன் (வயது 16). அதிராம்பட்டினத்தில் கடந்த 5 மாதங்களாக டுட்டோரியல் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்விற்கு சிறப்பு பயிற்சி பெற்று வந்தார்.
இந்நிலையில், கடந்த அக்.19 ந் தேதி காலை முத்துப்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் அதிராம்பட்டினம் செல்வதாக கூறிச் சென்றாராம். பின்னர் பல மணி நேரமாகியும் மாணவனிடமிருந்து எவ்வித தகவலும் வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களிலும் தேடி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 5 நாட்களுக்கு பின், மாயமான மாணவன் தஞ்சையில் இருந்ததும், பின்னர் சொந்த ஊரான முத்துப்பேட்டைக்கு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மாணவனின் தந்தை இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் முத்துப்பேட்டை ஆசாத் நகர் பகுதியில் இருந்த மகனை அப்பகுதி இளைஞர்களின் உதவியோடு வீட்டிற்கு அழைத்து சென்றார்.
காணாமல் போயிருந்த மகனை கண்டுபிடிக்க உதவிய அனைவருக்கும் எம். அப்துல் அஜீஸ் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.