.

Pages

Friday, October 27, 2017

குவைத்தில் பொது இடங்களில் BARBECUE சுட்டால் 10,000 தினார் அபராதம் !

அதிரை நியூஸ்: அக்.27
குவைத்தில் பார்பெக்யூ எனப்படும் பொதுவெளியில் கறி சுடும் செயலுக்கு 10,000 தினார் அபராதம் என உயர்த்தப்பட்டுள்ளது.

குவைத்தில் கறி சுட்டுத் விருந்து சாப்பிடுவது குற்றமல்ல மாறாக கடற்கரை, பூங்காக்கள் மற்றும் தோட்ட வெளிகளில் கறி சுடுவதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு தான் குற்றம் என குவைத் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.

அனுமதிக்கப்படாத பொது வெளிகளில் கறி சுடும் போக்கு அரேபியர்களிடமும் ஆசிய நாட்டவர்களிடமும் அதிகம் காணப்படுவதால் முதலில் 100 குவைத் தினார் என அபராதம் விதிக்கப்பட்டது. குற்றங்கள் குறையாததால் 2012 ஆம் ஆண்டு 1,000 தினராக உயர்த்தப்பட்டது என்றாலும் யாரும் திருந்தத் தயாராக இல்லாததால் அபராதம் 10 மடங்கு உயர்த்தப்பட்டு 10,000 தினார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவெளிகளில் பார்பெக்யூ விருந்து நடத்தி பிடிபடுபவர்கள் 2 வாரத்தில் அபராதத்தை கட்டிவிட்டால் அவர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படாது.

2014 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி கறி சுடும் விருந்து நடத்தி பிடிபடும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என தெரிவிக்கின்றது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.