அதிரை நியூஸ்: அக். 23
ஆஸ்திரேலியா நாட்டின் தென்பகுதி கடற்கரை பிரதேசமான நார்மன்வில்லி கடலில் 'காயக்' (Kayak) எனப்படும் சிறிய ரக பிளாஸ்டிக் படகில் 'கணவாய்' எனப்படும் ஒருவகை சிப்பிமீன் பிடித்துக் கொண்டிருந்தார் 15 வயது இளம்பெண் சாரா வில்லியம்ஸ் என்பவர். அப்போது தீடீரென அவரது காயக் படகை சுமார் 4.5 மீட்டர் நீளமுள்ள (15 அடி) பெரிய வெள்ளைச் சுறா மீன் (Great White Shark) ஒன்று தாக்கியதால் அவர் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டார்.
ஆவேசம் கொண்ட சுறா மீண்டும் மீண்டும் 3 முறை காயக் படகையே குறிவைத்து தாக்கிக் கொண்டிருந்த இடைவெளியில் கடலில் தத்தளித்த சாராவை அவரது தந்தையும் சகோதரனும் மின்னல் வேகத்தில் செயல்பட்டு தங்களது படகில் தூக்கிபோட்டு காப்பாற்றியதால் சுறாவுக்கு இரையாகவிருந்த சாரா சிறுகாயங்களுடன் தப்பியதாக அவரது தந்தை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.