.

Pages

Sunday, October 22, 2017

அதிரையில் 2 ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் சிறப்பு முகாம் !

அதிராம்பட்டினம், அக்.22
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், திருத்தம், நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்காக, அதிராம்பட்டினத்தில் உள்ள 25 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம், முதல்கட்டமாக கடந்த அக்.8 ந் தேதி நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக இன்று அக்.22 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் நடைபெறுகின்றன.

இதில், அதிராம்பட்டினத்தில் உள்ள 25 வாக்குச் சாவடி மையங்களிலும், வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களும் தாங்கள் வாக்களித்து வரும் வாக்குசாவடி மையத்திற்கு (Booth) சென்று தமது பெயர் வாக்காளர் பட்டியலில் தவறு ஏதுமின்றி சரியாக இடம் பெற்றுள்ளதா என்பதனை சரி பார்த்து உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், புதிதாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற படிவம்  6- ஐ அந்தந்த வாக்குச்சாவடி அலுவலரிடம் பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலரிடமே 31-10-2017 வரை அளிக்கலாம். பெயர் நீக்கம் செய்திட படிவம் 7 - ஐ பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். பெயர் மற்றும் முகவரியில் திருத்தம் ஏதும் செய்யப்படவேண்டின், படிவம்-8 ஐ பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். அதே தொகுதியில் முகவரி மாற்றம் செய்யப்பட வேண்டின்,  படிவம் 8A - ல் பூர்த்தி செய்து அளிக்கலாம்.

இவ்வாய்ப்பினை அதிராம்பட்டினம் பகுதி பொது மக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்கள் பெயர் வாக்காளர் பட்டிலில் பிழையின்றி இடம் பெற்றுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

செய்தி மற்றும் படங்கள்:
மர்ஜூக் ( மாணவச் செய்தியாளர்)
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.