தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் அப்துல் லத்திப். சமூக ஆர்வலரான இவர் கிடைக்கும் நேரங்களில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இன்று வியாழக்கிழமை காலை அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகே 2 இடங்களில் புதிதாக புங்கை மரக்கன்றுகளை நட்டார்.
இதுகுறித்து அப்துல் லத்திப் கூறியது;
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி, கடந்த 6 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டு வருகிறேன். இதுவரையில், புங்கை, வாகை, வேம்பு, ஆழ மரம், மகிழம் உள்ளிட்ட 200 மரக்கன்றுகளை பல்வேறு பகுதிகளில் நட்டுள்ளேன். மேலும், பள்ளிக்கூடங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி இருக்கிறேன். நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு சேவையும் நமது மனதை தூய்மை அடைய வைக்கும். பணம் தராத மகிழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் பணி எனக்கு அதிகமாக தருகிறது. மேலும், மரக்கன்றுகள் சுற்றுக்சூழலை பாதுகாப்பதால், இப்பணியில் முழுமனதுடன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன்' என்றார்.
வாழ்த்துக்கள் லத்தீப் காக்கா
ReplyDeleteதம்பி லத்தீப் ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மாபள்ளி பின்புறம் (கேட் அருகில்) 2,3 நிழல்/பூக்கும் மரங்களை நட கேட்டுக்கொள்கிறேன்.ஜும்மா மற்ற தொழுகை நேரங்களில் வாகனங்கள் வெயிலில் நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது.உங்கள் சேவைக்கு அல்லாஹ் வெகுமதி அளிப்பானாக.
ReplyDeleteMy contact no. 98414 93737