.

Pages

Sunday, October 22, 2017

அரபு நாடுகளின் விசா உள்ளவர்களுக்கு துனீசியா நாட்டின் ON ARRIVAL விசா !

அதிரை நியூஸ்: அக். 22
வளைகுடா நாடுகள் (GCC) என அழைக்கப்படும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய அரபுநாடுகளில் செல்லத்தக்க ரெஸிடென்ட் விசாவில் வாழும் அனைத்து நாட்டவர்களும் துனீசியாவிற்கு ஆன் அரைவால் விசாவில் (on Arrival Visa) உள்ளே செல்லலாம், முன் கூட்டியே விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.

இவர்களில் துனீசியாவுடன் விசா விலக்கு ஒப்பந்தங்கள் செய்து கொள்ளாத நாடுகளிலிருந்து வருபவர்கள் 15 நாட்களுக்கான விசா அனுமதிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். (residents from countries that do not have visa-exemption agreements with Tunisia had to pay for the visa, which was valid for 15 days)

2011 ஆம் நடைபெற்ற மக்களின் அரசியல் புரட்சிகளுக்குப் பின் சரிந்துவிட்ட சுற்றுலா வருவாயை உயர்த்துவதற்காக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

கடந்த 9 மாதங்களில் சுமார் 4.5 மில்லியன் சுற்றுலாவாசிகள் துனீசியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில் இந்த வருட இறுதிக்குள் எண்ணிக்கை 5.5 மில்லியன் சுற்றுலாவாசிகளாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்வேறு நாடுகளிலும் தற்போது தளர்த்தப்பட்டு வரும் விசா நடைமுறைகளை வாய்ப்பாக கொண்டு தாயகத்தினர் புதிய வாய்ப்புக்களை தேடிக் கொள்வார்கள் என நம்புவோம்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.