17 ஆண்டுகளுக்குப் பின் சவுதியிலிருந்து மீட்கப்பட்ட பணிப்பெண் நாடு திரும்பினார்.
இலங்கையிலிருந்து 2000 ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு குசுமாவதி என்ற சிங்களப் பெண் வீட்டு வேலைக்காக சென்றுள்ளார். சென்றவருக்கு ஆள் அரவமற்ற பாலைவனத்தில் ஆடு மேய்க்கும் பணி வழங்கப்பட அதையே தொடர்ந்து 15 ஆண்டுகளாக செய்து வந்த நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இலங்கை உறவினர்களிடமிருந்து முற்றிலுமாக தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டார், காரணம் தெரியவில்லை.
இந்நிலையில் இலங்கை உறவினர்கள் அவர்களின் அரசுக்கு கண்டுபிடித்து மீட்டுத்தரும்படி கோரிக்கை எழுப்ப, இலங்கை தூதரகம் சவுதி அதிகாரிகளின் துணையுடன் அப்பெண்ணை அவரது முதலாளியிடமிருந்து மீட்டு நாட்டுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பள நிலுவையாக 3.6 மில்லியன் இலங்கை ரூபாய்களும் கிடைத்தது.
ஒருபுறம் ஆடு, ஓட்டகங்கள் மேய்ப்பதற்காக ஒரு பெண்ணை 17 வருடங்கள் நாட்டுக்கு அனுப்பாத முதலாளியின் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என்ற பலத்த கோரிக்கைகள் எழும்பி வரும் நிலையில், அந்தப் பெண் விருப்பப்பட்டுத் தான் 15 ஆண்டுகளாக தங்கியிருந்தார். அவர் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு செல்வதற்கு முன் ஒருபோதும் தான் இலங்கைக்கு திரும்புவது குறித்து உறவினர்களிடம் புகார் சொன்னதே இல்லை என்று இன்னொரு சாரார் தெரிவிக்கின்றனர். இருபுறம் விசாரிக்கப்பட்டு குற்றம் செய்தது ஊர்ஜிதமானால் கண்டிப்பாக சவுதி முதலாளி தண்டிக்கப்பட வேண்டும் என சொல்வோரும் உண்டு.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் 2 .0 ஆடியோ ரிலீஸ் ஆனதாமே அதனைப்பற்றி நம்மவூரான் எதுவும் எழுதலே., என்னமோ போங்க.
ReplyDelete