.

Pages

Sunday, October 22, 2017

டுட்டோரியல் பள்ளி மாணவனை காணவில்லை ~ வயது (16)

அதிராம்பட்டினம், அக்.22
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தெற்கு தெருவைச் சேர்ந்தவர் எம். அப்துல் அஜீஸ். இவரது மகன் முஜாஹிதீன் (வயது 16). அதிராம்பட்டினத்தில் கடந்த 5 மாதங்களாக டுட்டோரியல் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்விற்கு  சிறப்பு பயிற்சி பெற்று வந்தார். 

இந்நிலையில், கடந்த அக்.17 ந் தேதி இரவு முத்துப்பேட்டையில் உள்ள தனது இல்லத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் அதிராம்பட்டினம் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். பின்னர் பல மணி நேரமாகியும் மாணவனிடமிருந்து எவ்வித தகவலும் வராததால் பதற்றமடைந்த தந்தை, இதுதொடர்பாக அதிராம்பட்டினத்தில் உள்ள டுட்டோரியல் பள்ளி ஆசிரியரிடம் விசாரித்த போது, மாணவன் மீண்டும் அதிராம்பட்டினத்திற்கு வராதது தெரியவந்தது. 

காணாமல் போன அன்று கிரே கலர் டீசர்ட், கரு நீல ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தானாம். இவனது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதுவரையில் முஜாஹிதீன் வீடு திரும்பாததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர். மேலும் இதுகுறித்து இவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளனர்.

இவரை பற்றிய தகவல் கிடைத்தால் கீழ்கண்ட அலைப்பேசி எண்களில் உடனடியாக தொடர்புகொண்டு தெரிவிக்க மாணவனின் குடும்பத்தினர் சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: 9159277788 / 9585159881 / 9976661604 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.