.

Pages

Monday, October 23, 2017

ஜப்பான் புயலுக்கு 3 பேர் பலி 90 பேர் காயம் !

அதிரை நியூஸ்: அக். 23
ஜப்பானில் இன்று அதிகாலையில் கரையைக் கடந்த சூப்பர் டைபூன் லேன் (Super Typhoon Lan) எனும் 'கேட்டகிரி 4' வகைப் புயல் (Category 4 Hurricane) டோக்கியோ நகரில் சுழன்றடித்து விட்டு 'கேட்டகிரி 2' வகைப் புயலாக வலுவிழந்து மீண்டும் கடல் பரப்புக்குள் சென்றது, புயலுடன் கனமழையும் மணிக்கு 80 மி.மீ என்ற அளவில் கொட்டித் தீர்த்தது. இதனால் பல பகுதிகளில் நிலச்சரிவும், பெரு வெள்ளமும், சாலைகளில் அரிப்பும் ஏற்பட்டன.

ஜப்பானிய அரசு பல்லாயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதால் மனித மற்றும் பொருட் சேதங்கள் குறைவாக அமைந்தன. 300க்கு மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மீன்பிடி படகுகள் சாலைகளுக்குள் இழுத்து வரப்பட்டிருந்தன. ஒரு கண்டெய்னர் கப்பல் ஒன்று துறைமுக சுவர்களில் மோதி சேதமடைந்தது.

தலைநகர் டோக்கியோவிலிருந்து சுமார் 200 கி.மீ தூரத்திலுள்ள கொரியாமா (koriyama) எனும் நகர ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் அங்கிருந்த சுமார் 80,000 மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். சூப்பர் டைபூன் லேன் எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த புயலுக்கு இதுவரை சுமார் 3 பேர் பலியாகி இருப்பதாகவும் சுமார் 90 பேர் வரை காயமடைந்திருப்பதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.