.

Pages

Saturday, October 28, 2017

குஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினப்படிமம் கண்டுபிடிப்பு!

அதிரை நியூஸ்: அக். 28
குஜராத்தில் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல்வாழ் உயிரினப்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள மேற்புற பாலைவனப் பகுதி 'இந்திய துணைக்கண்டத்தின் ஜூராசிக் பார்க்' என அழைக்கப்படுகிறது.

இங்கு இந்திய மற்றும் ஜெர்மானிய விஞ்ஞானிகள் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் வழியாக சுமார் 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய ஊர்ந்து செல்லும் தன்மையுடைய வரலாற்று காலத்திற்கு முந்தைய மீனின் (Fossil of Fish Lizard) படிமம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

சுமார் 5;.5 மீட்டர் (18 அடி) நீளமுள்ள இந்தப் படிமம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கண்டபிடிக்கப்பட்டாலும் அந்தப்படிமம் குறித்து மேலும் பல உண்மைகளை அறிந்து கொள்வதற்காகவும், முழுமையாக படிமத்தை மீட்டெடுப்பதற்காகவும் ஆராய்ச்சியாளர்கள் நீண்டகாலம் எடுத்துக் கொண்டனர்.

மெஸோசோயிக் காலம் எனப்படும் டைனோசர்கள் பூமியில் உலாவிய 250 வருடங்களுக்கு முற்பட்ட இந்த பல்லி வடிவ மீனுக்கு The ichthyosaur என்ற பெயரை சூட்டியுள்ளனர், (Mesozoic Era upwards of 250 million years ago when dinosaurs roamed the earth)

இந்த மீன் தற்போது வாழும் டால்பின் மீன் இனத்தை போன்றது. இதுபோன்றதொரு உயிரினம் இந்தியாவில் தற்போது தான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்படுகிறது என்றாலும் இதைப்போன்ற படிமங்கள் ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் கிடைத்துள்ளன.

இந்தியாவின் குஜராத்தில் தான் பல புதிய வகை டைனோசர் படிமங்கள் அதிகளவில் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன, குறிப்பாக நர்மதா ஆற்று வெளியில். 2003 ஆம் ஆண்டு நேஷனல் ஜியாக்ரபி குழுவினர் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட சுமார் 30 நீளமுள்ள இந்த டைனோசருக்கு நர்மதை ஆற்றை குறிக்கும் வகைளில் "Rajasaurus Narmadensis" என பெயரிட்டனர்.

மேலும் கட்ச் பகுதியிலிருந்து சுமார் 90 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள அகமதாபாத் நகருக்கு தென்புறத்தில் அமைந்துள்ள பாலாசினொர் (Balasinor) எனுமிடத்தில் டைனோசர்கள் முட்டையிட்டு அடைகாக்கும் இடம் (A large dinosaur egg hatchery) கண்டறியப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Source: Emirates 247 / AFP
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.