அபுதாபி நகரின் அழகை கெடுக்கும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் சைக்கிள் பார்க்கிங் செய்த 55 பேருக்கு தலா 3,000 திர்ஹம் வீதம், 165 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதிக்கப்பட்டது.
அபுதாபி சமூக காவலர்கள் (Abu Dhabi Community Police) மற்றும் சஹாரா டிரான்ஸ்போர்ட் கம்பெனி (ரெக்கவரி) ஆகியவற்றுடன் அபுதாபி மாநகராட்சி அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் அபுதாபி நகரின் எழிலை கெடுக்கும் வகையிலும் பொது சொத்துக்களுக்கு சேதம் உண்டாக்கும் வகையிலும் மின்கம்பங்களிலும் அனுமதியில்லாத பிற இடங்களிலும் சைக்கிள் பார்க்கிங் செய்திருந்த 40 பேருக்கு கடும் எச்சரிக்கையும், 55 பேருக்கு தலா 3,000 திர்ஹமும் அபராதங்கள் விதிக்கப்பட்டு சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த அதிரடி நடவடிக்கை எடுக்குமுன்பாக 3 தினங்களுக்கு முன் பொது எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவகாசம் வழங்கப்பட்டிருந்தன. பறிமுதல் செய்யப்பட்ட சைக்கிள்களை மீண்டும் பெற சைக்கிள் உரிமையாளர்கள் சைக்கிள்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள பட்டிக்கு (Impoundment area) சென்று அடையாளம் காட்டியபின் சஹாரா நிறுவனத்திற்கு ரெக்கவரி வாடகை கட்டணத்தை செலுத்திய ரசீதுடன் மாநகராட்சியின் அபராத கட்டணங்களை செலுத்தி சைக்கிள்களை விடுவித்துச் செல்லலாம் என அபுதாபி மாநகராட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.